தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தொகுப்பாளராக தனது பயணத்தை துவங்கிய ஐஸ்வர்யா, தற்போது அரை டஜன் படங்களுக்கு மேல் கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் தனது நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள பூமிகா படத்தில் நடித்தது குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இயக்குனர் பா ரஞ்சித்தின் முதல் படமான ’அட்டகத்தி’ படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அதன்பின்னர் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக’காக்கா முட்டை’ படத்தில் நடித்து அசத்தியிருந்தார். அதன்பின்னர் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாபாத்திரத்தை மையப்படுத்தி உருவான ’கனா’ திரைப்படத்தின் மூலம் இவருக்கென்று தமிழ் சினிமாவில் தனி மார்க்கெட்டை உருவாக்கியது.

இந்நிலையில் ரதீந்திரன் பிரசாத் என்பவர் இயக்கத்தில் பூமிகா என்ற படத்த்தில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்தப்படத்தை கார்த்திக் சுப்பாராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாராகியுள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 22 தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு விஜய் தொலைக்காட்சியில் வெளியாகிறது. அத்தடன் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் இந்தப்படம் வெளியாகிறது.

சர்ச்சைகளை கிளப்பிய ஜோதிகாவின் பேச்சிற்கு பிறகு ஏற்பட்ட மாற்றங்கள்: இயக்குனர் நெகிழ்ச்சி!
பூமிகா படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு குழந்தைக்கு தாயாக நடித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும் போது, இதுபோன்ற வேடங்களில் இப்போது நான் மட்டுமே நடித்து வருகிறேன். தாயாக நடிப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. பூமிகாவைப் பார்ப்பவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு செடியையாவது வளர்ப்பார்கள் என தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அண்மையில் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியான திட்டம் இரண்டு படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக சோனி லைவ் தமிழில் ரீமேக் செய்யும் தெலுங்கு படம் ஒன்றிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்க உள்ளார். அதே போல் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டாமாக உருவாகி வரும் ‘பொன்னியன் செல்வன்’ படத்திலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.