ஹைலைட்ஸ்:

  • ஸ்ரீதேவி மகள்கள் மீது பாசமாக இருக்கும் அர்ஜுன் கபூர்
  • அர்ஜுனை தன் சொந்த அண்ணனாக பார்க்கும் ஜான்வி

ஏற்கனவே திருமணமாகி அர்ஜுன், அன்ஷுலா என்கிற குழந்தைகளுக்கு தந்தையான தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஸ்ரீதேவி. தன் அம்மாவின் வாழ்க்கையை கெடுத்தவர் என்று ஸ்ரீதேவி மீது கோபத்தில் இருந்தார் நடிகர் அர்ஜுன் கபூர்.

அர்ஜுனின் கோபத்தை நினைத்து எப்பொழுதுமே பயத்தில் இருந்தார் ஸ்ரீதேவி என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். ஆனால் ஸ்ரீதேவி இறந்த பிறகு அர்ஜுன் ஆளே மாறிவிட்டார். ஸ்ரீதேவியின் மகள்களான ஜான்வி மற்றும் குஷியை தன் சொந்த தங்கைகள் போன்று பார்த்துக் கொள்கிறார்.

இந்நிலையில் அர்ஜுனும், ஜான்வியும் சேர்ந்து முதல்முறையாக ஒரு பத்திரிகையின் அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளனர். மேலும் அண்ணன், தங்கை உறவு குறித்தும் பேட்டி அளித்திருக்கிறார்கள்.

அந்த பேட்டியில் அர்ஜுன் கூறியதாவது,

முன்பெல்லாம் நானும், ஜான்வியும் பேசிக்கொள்ள மாட்டோம். சந்திப்போம் ஆனால் சொல்லிக்கொள்ளும்படி பேச மாட்டோம் என்றார்.

அதை கேட்ட ஜான்வியோ, என் குடும்பத்தாரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். எங்கள் இருவருக்கும் ஒரே தந்தை, எங்களுக்கு ஒரே ரத்தம். நான் தினமும் அர்ஜுன் அண்ணா வீட்டிற்கு செல்ல மாட்டேன். ஆனால் அவருடன் இருக்கும்போது பாதுகாப்பாக உணர்கிறேன். என்ன நடந்தாலும் அண்ணனும், அக்கா அன்ஷுலாவும் என் பக்கம் இருப்பார்கள் என்பது எனக்கு தெரியும். இதை நான் தைரியமாக சொல்வேன் என்றார்.

ஜான்வியின் பேட்டியை பார்த்தவர்களோ, அர்ஜுன் இந்த அளவுக்கு பாசமாக இருப்பார் என்பது முன்பே தெரிந்திருந்தால் ஸ்ரீதேவி நிம்மதியாக இருந்திருப்பார், இறந்திருப்பாரே என்று தெரிவித்துள்ளனர்.

அண்ணன் நடிகரை காதலிக்கும் ஹேன்ட்சம் ஹீரோவின் மாஜி மனைவி