‘சிந்து சமவெளி’ படம் தொடங்கி ‘ஆடை’ படம் வரையில் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருபவர் நடிகை அமலா பால். திரைப்பட வாய்ப்புகள் இல்லையென்றாலும், இன்ஸ்டகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாகவே இருந்து வருகிறார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமலா பால் பகிர்ந்துள்ள வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் விஜய், தனுஷ், ஆர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள அமலா பால், டைரக்டர் ஏ.எல்.விஜய்யை காதல் திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து கடந்த 2016 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பிறகும் கூட தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார் அமலா பால்.

தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி கதாநாயகியாக நடித்து வரும் அமலாபால் , இப்பொழுது பாலிவுட்டிலும் தடம் பதித்து வருகிறார். பாலிவுட்டில் வெற்றி பெற்ற ‘லஸ்ட் ஸ்டோரிஸ்’ தெலுங்கில் அமலாபால் நடிப்பில் ‘பிட்ட கதாலு’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி , அங்கும் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

ஜனநாயகத்தில் மக்கள் தான் எஜமானர்கள்.. ட்வீட் போட்ட சூர்யா: கொண்டாடும் ரசிகர்கள்!
சினிமாவில் கொஞ்சம் கேப் இருந்தாலும், இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட போட்டோக்களையும் போஸ்ட்களையும் போட்டு ரசிகர்களுடன் எப்போதுமே தொடர்பில் இருந்து வருகிறார் அமலா பால். இந்நிலையில் தினமும் காலை எழுந்ததும் யோகா மற்றும் மான்ஸ்டர் ஆரோக்கிய பானம் குடிக்காமல் எனது காலை பொழுது தொடங்காது என மான்ஸ்டர் குளிர் பானத்துக்கு கவர்ச்சி பொங்க ஜிம் டிரெஸ்சில் விளம்பரம் நடித்துக் கொடுத்துள்ளார்.

அமலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த விளம்பர வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் கடைசியாக அமலா பால் நடிப்பில் ஆந்தாலாஜி படமான ‘குட்டி ஸ்டோரி’ வெளியாகி இருந்தது. அடுத்ததாக இவர் நடிப்பில் ‘அதோ அந்த பறவை போல‘ படம் உருவாகி வெளியீட்டிற்கு காத்து கொண்டிருக்கிறது.

அட ராய் லெட்சுமியா இது; நம்பவே முடியலேயேப்பா!