பழம்பெரும் பாலிவுட் நடிகரான திலீப் குமார், மூச்சுத்திணறல் காரணமாக கடந்த மாதம் மும்பையின் கர் பகுதியில் இருக்கும் ஹிந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்றைய அவரது உடல்நிலை தேறி வருவதாக அவர் மனைவி சாய்ரா பானு தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார் திலீப் குமார்.

யூசுப் கான் என்ற இயற்பெயரைக் கொண்ட திலீப் குமார் பாலிவுட்டின் 1950 களில்பாலிவுட் சினிமாவின் உச்சநட்சத்திரமாக திகழ்ந்தார். அவரது நடிப்பில் வெளியான தேவ்தாஸ், மொகல்-இ-அஸாம், கங்கா ஜமுனா உள்ளிட்ட படங்கள் இன்றும் பாலிவுட் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. 65க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள திலீப் குமார் இறுதியாக 1998ஆம் ஆண்டு வெளியான ‘கிலா’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் திலீப் குமாரின் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள். அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் திலீப் குமார் மறைவுக்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

திருமணம் என்பதே அறியாமை: ஆமிர்கானுக்கு சப்போர்ட் செய்து வம்பில் மாட்டிய சர்ச்சை இயக்குனர்!
அதில், ‘புகழ்பெற்ற இந்தி நடிகர் திலீப்குமார் அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகின்றேன். இயற்கையான நடிப்பால், இலட்சக்கணக்கான ரசிகர்களைப் பெற்றார். இந்தித் திரை உலகின் சிவாஜிகணேசன் எனப் போற்றப்பட்டார்.

நல்ல மனிதர். நல்ல நடிகர். திரை உலகின் உயரிய, தாதா சாகேப் பால்கே மற்றும், பத்மவிபூசண் விருதுகளைப் பெற்றவர்.அவர் மாநிலங்கள் அவை உறுப்பினராகப் பொறுப்பு வகித்தபோது, சந்தித்துப் பேசி இருக்கிறேன். அவரது நடிப்பைப் பாராட்டி இருக்கிறேன். நிறைவாழ்வு வாழ்ந்து, 98 வது அகவையில் இயற்கை எய்தி இருக்கின்றார். அவரது புகழ் நிலைத்து நிற்கும்.” எனத் தெரிவித்துள்ளார் வைகோ.