இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வாலுக்கு பதில் த்ரிஷாவை நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறாராம் ஷங்கர்.

இந்தியன் 2

-2

கொரோனா வைரஸ் பிரச்சனை எல்லாம் ஏற்படுவதற்கு முன்பு துவங்கப்பட்ட படம் இந்தியன் 2. ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடித்து வந்தார்கள். செட்டில் கிரேன் விழுந்த விபத்தில் 3 பேர் பலியான பிறகு படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் படப்பிடிப்பை மீண்டும் துவங்கவிருக்கிறார்கள்.

காஜல் அகர்வால்

இந்தியன் 2 படப்பிடிப்பை டிசம்பர் மாதம் துவங்குகிறார்கள். இதற்கிடையே காஜல் அகர்வால் படத்தில் இருந்து விலகிவிட்டார். அவர் கர்ப்பமாக இருப்பதால் விலகியதாக கூறப்படுகிறது. இதையடுத்து காஜலுக்கு பதில் த்ரிஷாவை நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறாராம் ஷங்கர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

த்ரிஷா

கமலும், த்ரிஷாவும் முன்னதாக மன்மதன் அம்பு, தூங்காவனம் ஆகிய படங்களில் சேர்ந்து நடித்தார்கள். இந்நிலையில் மூன்றாவது முறையாக சேர்ந்து நடிக்கவிருக்கிறார்கள். இந்தியன் 2 பட பிரச்சனை ஜவ்வாக இழுத்துக் கொண்டிருந்ததால், ராம் சரணை வைத்து ஆர்.சி. 15 படத்தை இயக்கச் சென்றுவிட்டார் ஷங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம்

ஷங்கர், ராம் சாரண் படத்தை இயக்க, கமலோ லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விக்ரம் படத்தை அடுத்து மகேஷ் நாராயண் இயக்கத்தில் நடிக்கிறார் கமல். அந்த படத்திற்கு கமல் தான் கதை எழுதுகிறார்.