ஹைலைட்ஸ்:

  • ரஜினி பெயரில் கல்லூரியின் புகைப்படம்
  • ரஜினி கல்லூரி புகைப்படத்தால் மக்கள் குழப்பம்

ரஜினிகாந்த் அவர் உண்டு, படங்கள் உண்டு என்று இருக்கிறார். இந்நிலையில் Rajinikanth medical college of engineering for commerce and arts என்கிற பெயரில் கல்லூரி இருப்பது போன்று யாரோ போட்டோஷாப் செய்த புகைப்படம் வெளியாகியிருக்கிறது.

ரஜினியால் செய்ய முடியாதது என்பது எதுவும் இல்லை என்று அவரின் ரசிகர்கள் நம்புகிறார்கள். இந்நிலையில் தான் மருத்துவம், பொறியியல், கலை ஆகியவற்றை சேர்த்து அவர் பெயரில் ஒரு கல்லூரி செயல்படுவது போன்று கிண்டல் செய்திருக்கிறார்கள்.

அந்த புகைப்படத்தை பயோகான் நிறுவனத்தின் தலைவர் கிரண் மஜும்தார் ஷா ட்விட்டரில் வெியிட்டு தன் வியப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
கிரணின் ட்வீட்டை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,

ரஜினியின் பெயர் இருப்பது போதாதா?. இப்படி ஒரு கல்லூரியை உலகத்திலேயே வேறு எங்கும் பார்க்க முடியாது. இங்கு ரஜினி மருத்துவ மாணவர்களுக்கு பாடம் எடுப்பார். அவர்கள் பொறியியல் மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பார்கள். பொறியியல் மாணவர்கள் காமர்ஸ் மாணவர்களுக்கு கிளாஸ் எடுப்பார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

கெரியரை பொறுத்தவரை சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினி. அந்த படம் தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக நவம்பர் மாதம் 4ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது.

கொரோனா வைரஸ் பிரச்சனைக்கு இடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் ஷூட்டிங் நடந்தது. ரஜினியை ஒரு குழந்தையை பார்த்துக்கொள்வது போன்று பத்திரமாக பார்த்துக் கொண்டார்கள். படபப்பிடிப்பு தளத்தில் ரஜினிக்கு அருகே செல்ல யாருக்கும் அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படி இருந்த சிம்புவா இப்படி ஆகிட்டார்!!!: கண் கலங்கும் ரசிகர்கள்