ஹைலைட்ஸ்:

  • விஐபி படம் வெளியாகி 7 ஆண்டுகள் நிறைவு
  • ட்விட்டரில் டிரெண்டாகும் 7YearsOfBlockBusterVIP
  • தனுஷ் தயாரித்து, நடித்த விஐபி

வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், அமலா பால், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்த வேலையில்லா பட்டதாரி படம் கடந்த 2014ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி வெளியானது. தனுஷ் தயாரித்து நடித்த அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

அந்த படம் ரிலீஸானதில் இருந்து வேலையில்லா பட்டதாரிகள் தங்களை அன்புடன் விஐபி என்றே அழைக்கிறார்கள். இந்நிலையில் வேலையில்லா பட்டதாரி படம் ரிலீஸாகி இன்றுடன் 7 ஆண்டுகள் ஆகிவிட்டது. படம் குறித்து ரசிகர்கள் பேசிக் கொண்டிருப்பதால் #7YearsOfBlockBusterVIP என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது.
எனக்கு தனுஷ் படமே பிடிக்காதுப்பா என்று சொல்பவர்களால் கூட விஐபியை பார்க்காமல் இருக்க முடியாது. அந்த அளவுக்கு படம் சுவாரஸ்யமாக இருந்தது. படித்துவிட்டு வேலையில்லாமல் கனவுகளை சுமந்து கொண்டிருக்கும் வேலையில்லா பட்டதாரிகள் கொண்டாடும் படமாக அமைந்துவிட்டது.

என்ஜினியர்களும், பொதுமக்களும் கொண்டாடிய படம். தெருவுக்கு தெரு என்ஜினியர்கள் இருக்கும் இந்த காலத்தில் விஐபி அவர்களை வெகுவாக கவர்ந்தது. விஐபி என்பது படம் அல்ல அது ஒரு எமோஷன் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
வேலையில்லா பட்டதாரியை அடுத்து விஐபி2 படம் வெளியானது. ஆனால் விஐபி அளவுக்கு அதன் இரண்டாம் பாகம் இல்லை என்று விமர்சனம் எழுந்தது.

விஐபி படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். அவரின் இசையில் அனைத்து பாடல்களும் ரசிகர்களை கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்முறையாக ரூ. 25 கோடி சம்பளம் வாங்கும் சிவகார்த்திகேயன்