ஹைலைட்ஸ்:

  • ரஜினியை இயக்கத் துடிக்கும் அல்போன்ஸ் புத்ரன்
  • ரஜினியை சந்திக்க முயன்றும் முடியவில்லை- அல்போன்ஸ் புத்ரன்
  • அண்ணாத்த படத்தில் நடித்து முடித்திருக்கும் ரஜினிகாந்த்

நேரம் படம் மூலம் இயக்குநரானவர் அல்போன்ஸ் புத்ரன். நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோரை வைத்து அவர் இயக்கிய பிரேமம் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அந்த படத்தில் சாய் பல்லவி மலர் டீச்சர் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மலர் டீச்சர் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானார். அதில் இருந்து ரசிகர்கள் சாய் பல்லவியை மலர் டீச்சர் என்றே அன்போடு அழைக்கிறார்கள். பிரேமம் படத்திற்கு பிறகு 5 ஆண்டுகளாக எந்த படத்தையும் அல்போன்ஸ் புத்ரன் இயக்கவில்லை.

இந்நிலையில் தான் ஃபஹத் ஃபாசில், நயன்தாராவை வைத்து பாட்டு படத்தை இயக்கப் போவதாக கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிட்டார். மலையாள படத்தில் பிசியாக இருக்கும் அல்போன்ஸ் புத்ரனிடம், நீங்கள் ரஜினி சாரை வைத்து படம் பண்ண வேண்டும் என்று ஆசைப்படுகிறேன், அவருக்கு நீங்கள் கதை வைத்திருக்கிறீர்களா என சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவர் கேட்டார்.

அதை பார்த்த அல்போன்ஸ் புத்ரன் கூறியதாவது,

ரஜினி சாருக்குக் கதை வைத்திருக்கிறேன். ஆனால் பிரேமம் முடிஞ்சு நிறைய வாட்டி மீட் பண்றதுக்கு முயற்சி பண்ணேன். இதுவரைக்கும் மீட் பண்ண முடியல.

நான் ரஜினி சாரை வச்சு படம் பண்ணனும்னு என் தலையில எழுதியிருக்குனா அது நடந்தே தீரும். நேரம் கரெக்ட் ஆவட்டும். நாம பாதி வேலை செஞ்சுட்டோம்னா மீதி பாதி கடவுள் பாத்துப்பாருனு ஒரு நம்பிக்கை இருக்கு. கடவுள் கோவிட் அழிக்கிறதுல பிசியா இருக்கார்னு நினைக்கிறேன். அதுக்கப்புறம் திரும்ப டிரை பண்றேன் என்றார்.

அல்போன்ஸ் புத்ரனின் பதிலை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ரசிகர்கள் சவுந்தர்யா ரஜினிகாந்தின் ஹேண்டிலை மென்ஷன் செய்து ஷேர் செய்கிறார்கள். அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் ரஜினி நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

நண்பர் ஸ்டாலினை சந்தித்து ரூ. 50 லட்சம் நிதி அளித்த ரஜினிகாந்த்ரஜினி தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார். ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்பை முடித்துக் கொண்டு கடந்த வாரம் தான் அவர் சென்னை திரும்பினார். இந்நிலையில் நேற்று தலைமைச் செயலகத்திற்கு சென்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ. 50 லட்சம் நிதி அளித்தார் ரஜினி.