ஹைலைட்ஸ்:

  • பிகினி போட்டோ வெளியிட்ட கீர்த்தி பாண்டியன்
  • படத்திற்காக வெயிட் போட்ட கீர்த்தி பாண்டியன்

பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி தன் அப்பா வழியில் படங்களில் நடித்து வருகிறார். அவரும், அருண் பாண்டியனும் நடித்த அன்பிற்கினியாள் படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

இந்நிலையில் அவர் கர்ப்பிணியாக நடிக்கும் கண்ணகி படத்தின் போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கீர்த்தி பாண்டியன் தன் பிகினி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கூறியிருப்பதாவது,

“கீர்த்தி கடலில் விழுந்தால், அவருக்கு நீந்தத் தெரியாவிட்டாலும் நீரில் மூழ்கி சாக மாட்டார், எப்படி?- ஏனென்றால் அவர் ஒரு குச்சி, அதனால் மிதந்து பிழைத்துக் கொள்வார்”. என் உருவத்தை பற்றி இப்படித் தான் பள்ளியில் ஜோக் அடித்தார்கள். நான் அவர்களுடன் சேர்ந்து சிரித்தாலும், ரொம்பவும் கஷ்டமாக இருந்தது.

அது என் டீனேஜில் நடந்தது. அந்த நாள் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. முதல் முறையாக அழுது கொண்டே தூங்கினேன். அதன் பிறகு பல ஆண்டுகளாக நான் சென்ற இடமெல்லாம் என் உருவத்தை பற்றி கிண்டல் செய்தார்கள். என்னிடம் எந்த தவறும் இல்லை என்பதை மெதுவாக புரிந்து கொண்டேன்.

நான் நடிக்கும் கதாபாத்திரத்திற்காக எடையை அதிகரிக்க வேண்டியதாகிவிட்டது. அங்கு தான் என் ஃபிட்னஸ் பயணம் துவங்கியது. நாம் முடிவு செய்துவிட்டால் முடியாதது என்பது எதுவும் இல்லை என்பதை உணர்ந்தேன்.

6 மாத கடின பயிற்சி மற்றும் அதிகமாக சாப்பிட்டு இப்படி ஆனேன். சாப்பிடுவதற்காக காலையில் 5 மணிக்கு எழுந்தேன். சாப்பிடும்போது வாந்தி எடுத்துவிடக் கூடாது என்பதற்காக அவ்வப்போது நடந்தேன். ஒவ்வொரு 100 கிராம் அதிகரிப்பும் எனக்க பெரிய வெற்றியே. இந்த மாற்றம் கூட எனக்கு பெரிய கொண்டாட்டம் தான்.

இது நான் எனக்காக செய்ததே தவிர, யாரையும் திருப்திபடுத்துவதற்காக இல்லை. நான் எந்த ஷேப், சைப், நிறத்தில் இருந்தாலும் எனக்கு என்னை பிடிக்கும் என்றார்.

கதறி அழணும் போல இருக்கிறது: வேதனையில் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்