Memes
oi-Jaya Chitra
சென்னை: ஏப்ரல் முதல் தேதியா இல்லை, இன்று காதலர் தினமா என இணையமே குழம்பிப் போகும் அளவிற்கு முட்டாள்கள் தின வாழ்த்திற்கு இணையாக காதலர்கள் பற்றிய மீம்ஸ்களும் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். ஆனால் அன்றைய தினம் காதலைச் சொல்ல தயங்குபவர்கள்கூட இன்றைய தினம் பயமின்றி காதலைச் சொல்ல தயாராகி விடுகின்றனர். காரணம் இன்று முட்டாள்கள் தினம் கொண்டாடப்படுவதுதான். காதலைச் சொல்லிய பிறகு, எதிர்தரப்பு ஓகே சொல்ல மறுத்து விட்டால், ‘சும்மா ஏப்ரல் ஃபூல் பண்ணினேன்..’ என நைசாக சமாளித்து விடலாம் என்பதாலேயே இன்றைய தினத்தையும் காதல் சொல்லும் தினமாக காதலர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். சிலர் இதுதான் வாய்ப்பு என மற்றவர்களை காதல் என்ற பெயரில் நிஜமாகவே ஏமாற்றவும் செய்கின்றனர்.
வெந்து தணிந்தது காடு! வார்னருக்கு வணக்கத்தை போடு! ஹைதராபாத்தை துவம்சம் செய்த சேட்டன்! கலக்கல் மீம்ஸ்
எது எப்படியோ முட்டாள்கள் தின மீம்ஸ்களுக்கு இணையாக, காதலர்களைக் கலாய்த்தும் இன்று அதிகளவில் மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன. அவை எல்லாமே ஜாலி ரகம் தான்.
இதோ அப்படியாக சில மீம்ஸ்கள் உங்களுக்காக…




English abstract
Those are some jolly memes assortment on April month 1st date birthday party.
Tale first revealed: Friday, April 1, 2022, 13:28 [IST]