ஹைலைட்ஸ்:

  • விவேக் பிறந்தநாள் இன்று
  • விவேக்கை நினைத்து ரசிகர்கள் வேதனை

படங்கள் மூலம் நம்மை எல்லாம் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த சின்ன கலைவாணர் விவேக்கின் பிறந்தநாள் இன்று. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரை மரக்கன்று நட வைக்க ஊக்குவித்த விவேக், கொரோனா தடுப்பூசி விஷயத்திலும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த நினைத்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொண்டார். மறுநாளே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நன்றாக சிரித்துப் பேசியிருந்த விவேக் இப்படி திடீர் என்று இறந்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. விவேக் தொகுத்து வழங்கிய LOL: எங்க சிரி பாப்போம் நிகழ்ச்சி அவர் இறந்த பிறகு அமேசான் பிரைமில் வெளியானது.

இறந்தும் நம்மை எல்லாம் சிரிக்க வைக்கிறார் என்று கூறி ரசிகர்கள் கண்கலங்கினார்கள். அவர் நடித்த அரண்மனை 4 படம் ரிலீஸாகி ரசிகர்களை கவர்ந்தது.

விவேக் சார் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுகிறோம் என்று ரசிகர்களும், திரையுலகினரும் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள். நீங்கள் இறந்துவிட்டீர்கள் என்பதை இன்னுமே எங்களால் நம்ப முடியவில்லை சார் என்கிறார்கள் ரசிகர்கள்.
எங்கிருந்தாலும் சிரித்த முகமாக இருப்பீர்கள் என்று நம்புகிறோம் என ரசிகர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

ஆசையா மாநாடு விழாவுக்கு வந்த சிம்புவுக்கு காத்திருந்த அதிர்ச்சி: இப்படி ஆகிடுச்சே