ஹைலைட்ஸ்:

  • ஓடிடியில் வெளியாகும் நயன்தாராவின் நெற்றிக்கண்?
  • ஓடிடி தளத்திற்கு ரூ. 15 கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட நெற்றிக்கண்?
  • நெற்றிக்கண் ஓடிடி ரிலீஸால் ரசிகர்கள் ஏமாற்றம்

மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண் படத்தை விக்னேஷ் சிவன் தன் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார். நெற்றிக்கண் படத்தில் நயன்தாரா பார்வையில்லாதவராக நடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரசிகர்களின் ஆவலை தூண்டியது.

இந்நிலையில் அந்த படத்தில் வரும் இதுவும் கடந்து போகும் பாடல் கடந்த 9ம் தேதி வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. சித் ஸ்ரீராம் பாடிய அந்த பாடலுக்கு யூடியூபில் 1 மில்லியன் வியூஸ் வந்ததை கொண்டாடினார்கள். நெற்றிக்கண் படம் எப்பொழுது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

நயன்தாராவை தியேட்டர்களில் பார்த்து கொண்டாட அவர்கள் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் நெற்றிக்கண் படத்தை ஓடிடியில் வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். படத்தை டிஸ்னி+ஹாட்ஸ்டார் நிறுவனத்திற்கு ரூ. 15 கோடிக்கு விற்பனை செய்துவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில் படக்குழுவுக்கு நெருக்கமானவர்கள் கூறியதாவது,

நெற்றிக்கண் படத்திற்கு ஓடிடி நிறுவனத்திடம் ரூ. 15 கோடி கேட்டார்கள். இறுதி கட்ட டீல் இன்னும் இரண்டு நாட்களில் கையெழுத்தாகிவிடும். படத்தை ஜூலை மாதம் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர் என்றார்கள்.

முன்னதாக ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் படமும் ஓடிடியில் வெளியானது. இதையடுத்து அவர் நடித்த நிழல் படமும் தியேட்டரில் இல்லாமல் ஓடிடியில் ரிலீஸானது. இந்நிலையில் நெற்றிக்கண் படமும் தியேட்டருக்கு வராது என்பதை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளனர்.

தலைவியின் படங்கள் எல்லாம் வரிசையாக ஓடிடியிலேயே வெளியாகிறதே. இதற்கு ஒரு தீர்வு இல்லையா அன்பான இயக்குநரே என விக்னேஷ் சிவனிடம் கேட்டுள்ளனர்.

கமலுக்கு இப்போ அப்படி ஒரு ஐடியாவே இல்லையாம்: எல்லாமே பொய்யாம் கோப்ப்பால்