ஹைலைட்ஸ்:

  • அருண்ராஜ் காமராஜ் மனைவி சிந்துஜா கொரோனாவால் மரணம்.
  • பிபிஇ சூட்டுடன் மனைவிக்கு இறுதிசடங்கு செய்த அருண்ராஜ்.
  • சிந்துஜா மறைவிற்கு இரங்கல் தெரிவித்த நடிகை ப்ரியா பவானி சங்கர்.

நடிகரும், இயக்குநருமான அருண்ராஜா காமராஜின் காதல் மனைவி சிந்துஜா கொரோனா வைரஸ் பாதிப்பால் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 38. இயக்குனர் அருண்ராஜ் காமராஜும் கொரோனா பாதிப்பிற்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் பிபிஇ சூட்டுடன் தனது காதல் மனைவியின் இறுதிசடங்கில் அருண்ராஜ் கலந்து கொண்ட நிகழ்வு காண்போர்கள் அனைவரையும் கண் கலங்க செய்துள்ளது.

கொரோனா இரண்டாம் அலையின் கோர தாண்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல், ஆக்ஸிஜன் சிலிண்டர் கிடைக்காமல் மக்கள் அல்லலாடி வருகின்றனர். கொரோனா பாதிப்பால் ஏற்படும் மரணங்களும் அதிகரித்து வருகிறது. திரைத்துறையை சார்ந்த பிரபலங்கள் பலரும் கொரோனா பாதிப்பிற்குள்ளாகி உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அருண்ராஜாவும், அவரது மனைவி சிந்துஜாவும் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் சிகிச்சை பலனின்றி சிந்துஜா உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

இணையத்தை அலற விட்ட செல்பி புகைப்படம்: ஆள விடுங்க சாமி என பதறியடித்து விளக்கமளித்த மனோபாலா!
இந்நிலையில் நடிகை பிரியா பவானி சங்கர் தனது ட்விட்டரில், “இது ரொம்ப வருத்தமளிக்கிறது. ஒவ்வொரு புறப்படும் வாழ்க்கையும் விட்டுச்செல்லும் சோகமான செய்தி என்னவென்றால், நீங்கள், நான், நம் அன்புக்குரியவர்கள், பணக்காரர்கள், ஏழைகள், என இது யாருக்கும் ஏற்படக்கூடும். தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள். இப்படி ஒன்று நடந்திருக்கக் கூடாது என விரும்புகிறேன், அருண்ராஜாவுக்கு வலிமையும் தைரியமும் கொடுக்க கடவுளை மனதார வேண்டுகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

திரையுலகினரும், ரசிகர்கள் பலரும் காதல் மனைவியை இழந்துள்ள அருண்ராஜிற்கு பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். தற்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து ஆர்ட்டிகிள் 15 இந்தி படத்தை ரீமேக் செய்து வருகிறார் அருண்ராஜ்.