ரஜினிகாந்த், கமல், சரத்குமார்,விஜயகாந்த் ,அஜித், விஜய் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் நடிகை மீனா. 1990 ஆம் ஆண்டு கதாநாயகியாக திரையில் தோன்றினாலும் அதற்கு முன்பாகவே 1981 ல் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் மீனா. இந்நிலையில் தனது 40 ஆண்டு கால திரை பயணம் குறித்து பல தகவல்களை பகிர்ந்துள்ளார் நடிகை மீனா.

1990 ஆம் ஆண்டு புதிய கதை படத்தில் முதன்முறையாக ஹீரோயினாக அறிமுகமான மீனா, ரஜினிகாந்த் ஜோடியாக முத்து படத்தில் நடித்து முன்னணி நட்சத்திரம் ஆனார். நடிப்பில் பிஸியாக இருக்கும் போதே திருமணம் செய்து கொண்ட மீனா, சிறிது காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். அதனை தொடர்ந்து தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தனது நீண்டநாள் சினிமா அனுபவம் குறித்து பகிர்நது கொண்ட மீனா, முக்கியமான சில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும், கால்ஷீட் மற்றும் பிற காரணங்களால் நடிக்க முடியாததை வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதில் முக்கியமான திரைப்படம் பாசில் இயக்கத்தில் மம்முட்டி, மோகன்லால், ஷாம்லி நடிப்பில் வெளியான ஹரிகிருஷ்ணன்ஸ். இந்த படத்தில் ஜுஹி சாவ்லா நாயகி. மம்முட்டி, மோகன்லால் இருவருமே அவரை காதலிப்பார்கள். இந்த கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் மீனாவை தான் அணுகி உள்ளனர். ஒருசில காரணங்களால் அப்போது அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதை குறித்து வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் மீனா.

சன் டிவியில் நேரடியாக வெளியாகும் சமுத்திரக்கனி திரைப்படம்!
அதேபோல் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படையப்பாவில் சௌந்தர்யா நடித்த வேடமும், தேவர்மகனில் ரேவதியின் வேடமும் மீனா நடிக்க வேண்டியது. ஆனால் அப்போது கால்ஷீட் பிரச்சனையால் இந்த இரு படங்களிலும் நடிக்க முடியாமல் போயுள்ளது. அதேபோல் வாலியிலும் சிம்ரன் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் மீனாவையே கேட்டிருக்கிறார்கள்.

தன்னுடைய முப்பது வருட நாயகி வாழ்க்கையில் பல படங்கள் கைநழுவிப் போயிருந்தாலும், இந்த நான்கு படங்களில் நடிக்க முடியாமல் போனதில் மீனாவுக்கு மிகுந்த வருத்தமாம். தன்னுடைய எதிர்கால திட்டமாக இனி ஒரேவித கதாபாத்திரங்களில் நடிக்காமல் நெகடிவ் கதாபாத்திரங்களிலும் நடிக்க முடிவெடுத்துள்ளார் மீனா. இவரின் நடிப்பில் கடைசியாக மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் 2 திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்படத்தக்கது.