ஹைலைட்ஸ்:

  • கார்த்திக் வேணுகோபால் திருமணத்தில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன்
  • கார்த்திக் வேணுகோபாலுக்கு தங்கச் சங்கிலி பரிசளித்த சிவகார்த்திகேயன்

ரியோ ராஜை வைத்து சிவகார்த்திகேயன் தயாரித்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தை இயக்கியவர் கார்த்திக் வேணுகோபால். அவருக்கு நவம்பர் 15ம் தேதி கோவையில் திருமணம் நடந்தது.

அவர் சிவகார்த்திகேயனுக்கு அழைப்பிதழ் கொடுத்தபோது தன்னால் திருமணத்திற்கு வர முடியாத சூழல் என்று கூறியிருக்கிறார். இந்நிலையில் யாருக்கும் சொல்லாமல் தனியாக கோவைக்கு சென்று திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

மணமகனுக்கு தங்கச்சங்கிலியை பரிசாக அளித்திருக்கிறார். மேலும் திருமணத்திற்கு வந்த விருந்தாளிகளுடன் சேர்ந்து அமர்ந்திருக்கிறார். சாப்பிட்ட பிறகே அங்கிருந்து கிளம்பிச் சென்றிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது. சிவகார்த்திகேயன் செய்த காரியத்தை பார்த்த ரசிகர்களோ, இந்த மனசு தான் சார் கடவுள் என்கிறார்கள்.

கார்த்திக் வேணுகோபால் தன் இரண்டாவது படத்தை இயக்க தயாராகி வருகிறார். அது பிரமாண்ட படமாக உருவாகவிருக்கிறது. விரைவில் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது. இரண்டாவது படத்தை தன் திருமண பரிசாக கருதுவதாக கார்த்திக் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயனை பொறுத்தவரை அவர் புதுமுகம் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

பெரிய தப்பு பண்ணிட்டீங்களே: பிரபல சீரியல் நடிகையை பார்த்து பாவப்படும் ரசிகர்கள்