சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு‘ படத்தில் நடித்துள்ளார் சிம்பு. கடந்த பொங்கலுக்கு சிம்பு நடிப்பில் வெளியான ‘ஈஸ்வரன்’ படத்திற்கு பிறகு நீண்ட காலமாக இந்த படத்திற்காக காத்திருக்கின்றனர் ரசிகர்கள். தீபாவளி வெளியீடாக திரையரங்குகளில் ரிலீசாக இருந்த இந்தப்படத்தின் ரிலீஸ் தேதியை திடீரென படக்குழுவினர் மாற்றினார்கள்.

‘மாநாடு’ படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி நடித்துள்ளார். இவர் சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். இவர்களுடன் எஸ்ஏ சந்திரசேகர், பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திர சேகர், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா மற்றும் கருணாகரன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களே இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிம்பு, பார்வையாளர்களின் ரசனை தற்போது மாறிவிட்டதாக நினைக்கிறேன். வில்லன்களை அடிப்பதும், பன்ச் டயலாக் பேசுவதும் இனி ஹீரோயிசம் இல்லை. ‘சார்பட்டா பரம்பரை’ அற்புதமான கமர்ஷியல் படம் என்று சொல்வேன். ‘சார்பட்டா பரம்பரை’ திரையரங்குகளில் வெளியாகியிருந்தால் எப்படி ஓடியிருக்கும் என்பதை என்னால் கற்பனை செய்யமுடியவில்லை.

எங்களுக்கு ஓடிடி வேணாம்.. தியேட்டர் தான் வேணும்: அடம் பிடிக்கும் தனுஷ் ரசிகர்கள்!
‘வேட்டை மன்னன்’ மூலம் புதிய இயக்குனருக்கு வாய்ப்பளிக்க நினைத்தேன். ஆனால், சில காரணங்களால் அது நடக்காமல் போய்விட்டது. தற்போது ‘டாக்டர்’ போன்ற டார்க் காமெடி படங்களை மக்கள் ரசிக்கிறார்கள். அப்படத்தின் வெற்றி எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. நெல்சன் மிகவும் திறமையானவர். ‘வேட்டை மன்னன்’ படத்தின் 10 சதவீதம் கூட டாக்டர் படத்தில் இல்லை. அப்படம் அப்போது ரிலீஸாகியிருந்தால் அதை இப்போது காலம் கடந்த படம் என்று சொல்லியிருப்பார்கள்.

நான் ஒரு படத்துக்காக எடை கூடினேன். ஆனால், இரக்கமே இல்லாமல் மக்கள் என்னை கேலி செய்தார்கள். என்னை பாடி ஷேமிங் செய்தார்கள். எனக்கும் அனுஷ்காவுக்கும் நடந்தது ஒன்றுதான். நாங்கள் படத்துக்காக எடை கூடினோம். ஆனால், அதிர்ஷ்டவசமாக அனுஷ்கா அளவுக்கதிகமான பாடி ஷேமிங் கிண்டல்களை நான் எதிர்கொள்ளவில்லை. ஆனால் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் மோசமாகப் பேசினார்கள். இப்போது நான் ஆல்கஹாலைத் தொடுவதில்லை. சுத்த சைவமாகவும் மாறிவிட்டேன் என தெரிவித்துள்ளார் சிம்பு.

‘அண்ணாத்தே’யில் சிவா சொல்லி அடித்துள்ளார் ; படம் மிகப்பெரிய வெற்றி – ரஜினிகாந்த் புகழாரம்!