alyssa healy australia women 5723173

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அன்று இந்திய மகளிர் அணி தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிக்கு எதிராக விதிவசமான நோ-பாலினால் அரையிறுதி வாய்ப்பை இழக்க மே.இ.தீவுகள் அரையிறுதிக்கு நுழைந்ததைக் கொண்டாடியது, ஆனால் அதன் சந்தோஷம் இறுதி வரை நீடிக்காமல் போனது துரதிர்ஷ்டமே.மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதின. மழையால் ஆட்டம் 45 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 45 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 305 ரன் குவித்தது. தொடக்க வீராங்கனை அலிஷா ஹீலி சதம் அடித்தார். இவர் 107 பந்துகளில் 129 ரன்கள் விளாசினார். ஆனால் சதத்தை 91 பந்துகளிலேயே எடுத்து விட்டார். மேலும் ரச்சேல் ஹெய்ன்ஸ் (100 பந்தில் 85) உடன் சேர்ந்து இருவரும் 216 ரன்கள் என்ற அசாத்திய தொடக்கக்கூட்டனி அமைத்தனர். ஆஸ்திரேலியா உலகக்கோப்பை நாக் அவுட் போட்டியில் எடுக்கும் அதிகபட்ச ஸ்கோர் ஆகும் இது.

இதனையடுத்து 306 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. ஆனால், ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனைகள் சொற்ப ரன்களிலே அடுத்தடுத்து தங்களது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர்.

இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 37 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 148 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியா அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.

சுருக்கமான ஸ்கோர்: ஆஸ்திரேலியா 45 ஓவர்களில் 305-3: அலிசா ஹீலி (107 பந்துகளில் 129), ரேச்சல் ஹெய்ன்ஸ் (100 பந்துகளில் 85), பெத் மூனி (43 பந்துகளில் 31), சினெல்லே ஹென்றி (2-51)

மேற்கிந்திய தீவுகள் 37 ஓவர்களில் 148-8: ஜெஸ் ஜோனாசென் (2-14), மேகன் ஷட் (1-8), ஸ்டாபானி டெய்லர் (75 பந்துகளில் 48)

ஆட்ட நாயகி: அலிசா ஹீலி

தொடக்க வீராங்கனை டியான்ட்ரா டாட்டின்(34), ஹேலி மேத்யூஸ்(34), டெய்லர் (48) ஆகியோர் மட்டுமே இரண்டு இலக்க ரன்களை எடுத்தனர். நாளை மற்றோரு அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா-இங்கிலாந்து அணிகள் மோதுகிறது. இதில் வெற்றி பெறும் அணி ஏப்ரல் 3 தேதி நடக்கும் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியுடன் பலபரீட்சை நடத்தும்.

உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா வென்றா அது சாதனையான 7வது ஐசிசி உலகக்கோப்பை வெற்றியாகும் அந்த அணிக்கு.

இன்றைய முக்கிய செய்திகள் (Most sensible Tamil Information, Breaking Information), அண்மை செய்திகள் (Newest Tamil Information), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Thank You

Leave a Reply

Your email address will not be published.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads.

Please support us by disabling these ads blocker.