ஹைலைட்ஸ்:

  • சித்தார்த் இறந்துவிட்டதாக கூறும் யூடியூப் வீடியோ
  • அந்த வீடியோ குறித்து புகார் அளித்தும் பலன் இல்லை

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வரும் சித்தார்த் ட்விட்டரில் படு ஆக்டிவ். சினிமா தவிர்த்து நாட்டு நடப்பு குறித்து மனதில் பட்டதை மறைக்காமல் தெரிவிப்பவர் சித்தார்த். இதனால் அவரை பாராட்டுபவர்களும் உண்டு, திட்டித் தீர்ப்பவர்களும் உண்டு.

சித்தார்த் ஆரோக்கியமாக இருக்கிறார். இந்நிலையில் இளம் வயதில் இறந்த பிரபலங்கள் என்று கூறி யூடியூபில் வீடியோ ஒன்று இருக்கிறது. அந்த வீடியோவில் நடிகைகள் சவுந்தர்யா, ஆர்த்தி அகர்வாலின் புகைப்படங்களை காண்பித்துள்ளனர். அதே சமயம் சித்தார்த்தும் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வீடியோவை பார்த்த ரசிகர் ஒருவர் ஸ்கிரீன்ஷாட் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டு இது என்னது என்று கேட்டார்.

அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது போன்று சவுந்தர்யாவும், ஆர்த்தி அகர்வாலும் உயிருடன் இல்லை. ஆனால் சித்தார்த் உயிருடன் தான் இருக்கிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியான அந்த வீடியோ குறித்து ஏற்கனவே சித்தார்த்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில் ரசிகர் போட்ட ட்வீட்டை பார்த்த சித்தார்த் கூறியிருப்பதாவது,
நான் இறந்துவிட்டேன் என்று கூறும் இந்த வீடியோ பற்றி யூடியூபிடம் ஏற்கனவே புகார் தெரிவித்தேன். பல ஆண்டுகளுக்கு முன்பே. அவர்களோ, இந்த வீடியோவில் எந்த பிரச்சனையும் இருப்பதாக தெரிவியவில்லை என்று பதில் அளித்தார்கள்.

நானோ, அடப் பாவி என்பது போன்று இருந்தேன் என்றார்.

எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலினை பகைத்துக் கொண்ட பிக் பாஸ் பிரபலம்