ஹைலைட்ஸ்:

  • வனிதாவை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்
  • வனிதாவே தேடி வரும் பட வாய்ப்புகள்

வனிதா விஜயகுமார் தற்போது கோலிவுட்டில் பிசியோ பிசி. அடுத்தடுத்து புதுப்படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் நடித்திருக்கும் அந்தகன் படத்தில் சமுத்திரக்கனியின் மனைவியாக நடித்திருக்கிறார்.

பவர் ஸ்டார் சீனிவாசனுடன் சேர்ந்து பிக்கப் டிராப் படம் பண்ணுகிறார். இந்நிலையில் தான் தெலுங்கு நடிகர் நிரோஸுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, புது ப்ராஜெக்ட், விரைவில் வருகிறது, யூகித்துக் கொண்டிருங்கள் என்றார்.

அந்த புகைப்படத்தை பார்த்த வனிதாவின் ஆதரவாளர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அக்கா, மொத்தம் எத்தனை படத்தில் நடிக்கிறீர்கள். தினம், தினம் அறிவிப்பு வருகிறதே என கூறியுள்ளனர். ஆனால் சமூக வலைதளவாசிகள் வனிதாவை கலாய்த்துள்ளனர்.

சமூக வலைதளவாசிகள் கூறியிருப்பதாவது,

நிஜ வாழ்க்கையில் நியூ ப்ராஜெக்ட் போன்று. லிஸ்ட்டு ரொம்ப பெருசா போகுதே. இவர் தான் உங்களின் 4வது கணவரா, சின்னப் பையன் மாதிரி இருக்காரே. பழைய ப்ராஜெக்ட் உயிருடன் இருக்கிறதா?

மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு கன்டென்ட் கிடைத்துவிட்டது என்று தெரிவித்துள்ளனர்.

முன்னதாக பவர் ஸ்டார் தான் வனிதாவின் 4வது கணவர் என்று பேச்சு கிளம்பியது. அதற்கு வனிதா கூறியதாவது, நான் நான்கு அல்ல 40 திருமணம் கூட செய்வேன். அது என் இஷ்டம் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்கப் டிராப் படத்திற்காக வனிதாவும், பவரும் மாலையும் கழுத்துமாக இருந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் அவர்களுக்கு நிஜமாகவே திருமணமாகிவிட்டதாக நினைத்துவிட்டனர். அதன் பிறகே பவர் விளக்கம் அளித்தார்.

நவரசா ட்விட்டர் விமர்சனம்: ரசிகர்கள் கொண்டாடும் கிட்டார் கம்பி மேலே நின்று, அக்னி