ஹைலைட்ஸ்:

  • அமேசான் பிரைமில் கர்ணன் படம் பார்த்த கல்யாணி ப்ரியதர்ஷன்
  • கர்ணனை பாராட்டிய கல்யாணி
  • தனுஷ் நடிப்பை பார்த்து அசந்து போன கல்யாணி

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரஜிஷா விஜயன், லால், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவான கர்ணன் படம் ஏப்ரல் மாதம் 9ம் தேதி தியேட்டர்களில் வெளியானது. கொரோனா வைரஸ் பிரச்சனை, தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்று இருந்த போதிலும் கர்ணன் நல்ல வசூல் செய்தது.

இதையடுத்து ரம்ஜான் பண்டிகை அன்று அதாவது மே 14ம் தேதி கர்ணன் படம் அமேசான் பிரைமில் வெளியானது. தியேட்டருக்கு சென்று கர்ணனை பார்க்க முடியாமல் போய்விட்டதே என்று வருத்தப்பட்டவர்கள் அதை ஓடிடியில் பார்த்து ரசிக்கிறார்கள்.

இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் மாநாடு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ள கல்யாணி ப்ரியதர்ஷன் அமேசான் பிரைமில் கர்ணன் படம் பார்த்திருக்கிறார். தான் படம் பார்த்தபோது எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கல்யாணி கூறியிருப்பதாவது,

கர்ணன் படத்தை தியேட்டரில் பார்க்க முடியவில்லையே என்று அதிருப்தி அடைந்தேன். ஆனால் ஒரு வழியாக இன்று அமேசான் பிரைமில் பார்த்துவிட்டேன். சில படங்களை பார்த்தால் நாம் சினிமா துறையில் இருப்பதை நினைத்து, நம் கலையை நினைத்து பெருமைப்படத் தோன்றும். இது அத்தகைய படம் தான்.

kalyani

ஒவ்வொரு முறையும் உங்களால் மட்டும் எப்படி அருமையாக நடிக்க முடிகிறது தனுஷ் சார்?. ஒரே நேரத்தில் வேதனை அடைந்தேன், ஆவலுடன் இருந்தேன், வியந்தேன். ஆனால் நல்ல சினிமா இதை தானே செய்யும்? என தெரிவித்துள்ளார்.

கர்ணனை ஓடிடியில் பார்த்த பிரபல பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல். ராய் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
நீங்க நடிகர்னு நினைச்சேன், இப்போ தானே யார்னு தெரியுது தனுஷ்: பாலிவுட் இயக்குநர்அருமை…கர்ணனை இப்படித் தான் விவரிக்க முடியும் மாரி செல்வராஜ். என்ன ஒரு கதாசிரியர். உங்கள் கருத்துகளை திரையில் காட்டிய விதம் சிறப்பு. தனுஷ் நீங்கள் ஒரு மாயாஜாலக்காரர். இதை நீங்கள் என்னிடம் சொல்லியிருக்க வேண்டும். நீங்கள் ஒரு நடிகர் என்றல்லவா நான் நினைத்துக் கொண்டிருந்தேன் என்றார்.