ஹைலைட்ஸ்:

  • மருத்துவமனையில் இருந்து வீடியோ வெளியிட்ட யாஷிகா
  • யாஷிகாவின் வீடியோவை பார்த்து ரசிகர்கள் வேதனை

நடிகை யாஷிகா ஆனந்த் தன் தோழி பவானி, நண்பர்கள் செய்யது, அமீர் ஆகியோருடன் டின்னருக்கு சென்றுவிட்டு காரில் வீடு திரும்பினார். அப்பொழுது கிழக்கு கடற்கரை சாலையில் வந்தபோது கார் விபத்துக்குள்ளானதில் பவானி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த யாஷிகா சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது. யாஷிகா தன் காலில் பெரிய கட்டுடன் படுத்திருக்கும் புகைப்படம் வெளியாகி வரைலானது. இந்நிலையில் விபத்தால் ஏற்பட்ட காயத்திற்கு போடப்பட்ட தையல்களை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் யாஷிகா.

அந்த வீடியோவில் யாிகாவின் வயிற்றில் இருக்கும் தையல்கள் தெரிகிறது. அதை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். யாஷிகாவுக்கு வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த அளவுக்கு என்று தெரியாமல் போய்விட்டது.

யாஷிகா எப்படி எல்லாம் வலியில் துடிக்கிறாரோ என்கிறார்கள் ரசிகர்கள். முன்னதாக தன் உடல்நலம் குறித்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டார் யாஷிகா.

இன்னும் 5 முதல் 6 மாதங்களுக்கு தன்னால் எழுந்து நடக்க முடியாது என்றும், படுத்த படுக்கையாகத் தான் இருக்க வேண்டும் என்றும் யாஷிகா தெரிவித்தார். பவானி இறந்து, தான் உயிர் வாழ்வது குற்ற உணர்ச்சியாக இருப்பதாகக் கூறி வேதனைப்பட்டார் யாஷிகா என்பது குறிப்பிடத்தக்கது.

Nayanthara: இவ்ளோ நாள் இருந்துட்டு இப்போ போய் கைவிட்டுட்டீங்களா விக்னேஷ் சிவன்?