ஹைலைட்ஸ்:

  • பொங்கலுக்கு வராத எதற்கும் துணிந்தவன்
  • இரண்டு காரணங்களால் தள்ளிப் போன எதற்கும் துணிந்தவன் ரிலீஸ்

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் எதற்கும் துணிந்தவன் படம் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2022ம் பிப்ரவரி மாதம் 4ம் தேதி ரிலீஸாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது.

இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் பொங்கலுக்கு ஏன் ரிலீஸாகவில்லை என்பது தெரிய வந்திருக்கிறது. எதற்கும் துணிந்தவன் படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வாங்கியிருக்கிறது.

பொங்கலுக்கு ரிலீஸாகும் அஜித்தின் வலிமை படத்தை தமிழகத்தின் சில இடங்களில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் தான் வெளியிடுகிறது. அதனால் எதற்கும் துணிந்தவன் ரிலீஸை தள்ளிப் போட்டுவிட்டார்களாம்.

மேலும் ஆந்திரா, தெலுங்கானாவில் சூர்யாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள், ரசிகைகள் இருக்கிறார்கள். அங்கு பொங்கல் பண்டிகைக்கு பீம்லா நாயக், ஆர்ஆர்ஆர் ஆகிய மெகா படங்கள் ரிலீஸாகவிருக்கின்றன. அந்த படங்களின் ரிலீஸால் தியேட்டர் கிடைப்பதில் பிரச்சனையாக இருக்கிறதாம்.

அதையும் மனதில் வைத்து தான் எதற்கும் துணிந்தவனை பிப்ரவரி மாதம் ரிலீஸ் செய்கிறார்களாம். இந்நிலையில் மூன்று ஆண்டுகள் கழித்து தியேட்டரில் சூர்யாவை பார்க்கப் போகிறோம் என்கிற சந்தோஷத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

எதற்கும் துணிந்தவன் சூர்யாவுக்காக சிவகார்த்திகேயன் செய்த சிறப்பான செயல்