ஹைலைட்ஸ்:

  • நிரூபை வாழ்த்திய யாஷிகா
  • நண்பர் வருணுக்கும் வாழ்த்து

கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் 5 வீட்டில் இருக்கும் நிரூப் நந்தகுமாரின் உயரத்தை பார்த்து தான் பார்வையாளர்கள் வியக்கிறார்கள். வஞ்சமே இல்லாமல் வளர்ந்திருக்கிறார் என்கிறார்கள்.

இந்த நிரூப் நந்தகுமார் ஒரு காலத்தில் நடிகை யாஷிகாவை காதலித்தார். யாஷிகா லைவில் ரசிகர்களுடன் பேசியபோது வந்து அவருக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியவர்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் நிரூப் நந்தகுமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் யாஷிகா. அதை பார்த்த ரசிகர்களோ, யாஷிகாவுக்கு பெரிய மனசு. முன்னாள் கதாலர் என்கிறது இல்லாமல் அவர் பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பது தெரிந்ததும் வாழ்த்தியிருக்கிறாரே. அந்த மனசு தான் சார் கடவுள் என்கிறார்கள்.

யாஷிகா நிரூப் நந்தகுமாருக்கு மட்டும் அல்ல நடிகர் வருணுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். வருணும், யாஷிகாவும் நண்பர்கள் ஆவர்.

varun

கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த யாஷிகா தற்போது வீட்டில் ஓய்வில் இருக்கிறார். தான் எழுந்து நடக்க 5 மாதங்கள் ஆகும் என்றார். அண்மையில் கூட தன் கால்களில் பெரிய கட்டுடன் படுத்திருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

கணவரை பிரிந்தாச்சு, அடுத்தது என்ன?: சமந்தா வெளியிட்ட உருக்கமான பதிவு