ஹைலைட்ஸ்:

  • மாறன் மறைவுக்கு பா. ரஞ்சித் இரங்கல்
  • மாறன் இறந்ததை நம்பவே முடியவில்லை- ஆர்யா
  • கொரோனா பாதிப்பால் உயிரிழந்த நடிகர் மாறன்

விஜய்யின் கில்லி படத்தில் அவரின் நண்பர் ஆதிவாசியாக நடித்தவர் மாறன். விஜய்யின் வேட்டைக்காரன் படத்திலும் நடித்தவர். மேடை கச்சேரிகளில் கானா பாடல்கள் பாடி வந்த அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.

Maran Death: ‘கில்லி’ விஜய்யின் நண்பர் மாறன் கொரோனா பாதிப்பால் மரணம்அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். அவருக்கு வயது 48. அவரின் மரண செய்தி அறிந்த திரையுலகினர், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

மாறன் விஜய்யுடன் இருக்கும் புகைப்படங்களை தளபதி ரசிகர்கள் ஷேர் செய்துள்ளனர்.

பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்திருக்கும் சார்பட்டா பரம்பரை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மாறன். மாஞ்சா கண்ணன் என்கிற அவரின் கதாபாத்திரத்தை அறிமுகம் செய்து வைத்து போஸ்டர் எல்லாம் வெளியிட்டனர். படம் ரிலீஸாவதற்குள் மாறன் இறந்த செய்தி அறிந்து சார்பட்டா பரம்பரை படக்குழுவினர் வேதனை அடைந்துள்ளனர்.

இந்நிலையில் மாறன் பற்றி பா. ரஞ்சித் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
கடக்க முடியாத துயரம்..எப்போதும் கட்டுகடங்காத அன்பை பொழியும் மாறன் அண்ணாவே, உன் முகத்தை கூட காட்டவில்லை என்று உன் மகள் அழுகிறாள் ணா!! என்னிடம் தேற்றுவதற்கு வார்த்தைகள் இல்லை!! நண்பர்களே பாதுகாப்பாக இருங்கள் !! என தெரிவித்துள்ளார்.

ஆர்யா ட்வீட் செய்திருப்பதாவது,
மாறன் அண்ணாவின் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இதை என்னால் நம்பவே முடியவில்லை. உங்களை மிஸ் பண்ணுவோம் அண்ணா என குறிப்பிட்டுள்ளார்.

கொரோனாவின் இரண்டாம் அலையால் இந்தியா திணறிக் கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் நடிகர் மரணம் என்று கிட்டத்தட்ட தினமும் செய்திகள் வெளியாகி வருகிறது. மருத்துவமனையில் பெட் கிடைக்கவில்லை, ரெம்டெசிவிர் மருந்து கிடைக்கவில்லை, யாராவது ஏற்பாடு செய்து கொடுக்க முடியுமா என்று பிரபலங்கள் சிலரே சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுப்பதை பார்க்க முடிகிறது.