பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபும், நடிகர் விக்கி கௌஷலும் காதலிப்பதை நடிகர் ஹர்ஷ்வர்தன் கபூர் உறுதி செய்துள்ளார்.

கத்ரீனா கைஃப்

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கத்ரீனா கைஃப் மீண்டும் தன் முன்னாள் காதலரான நடிகர் சல்மான் கானுடன் சேர்ந்துவிட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் தான் அவரும், யுரி படம் புகழ் நடிகர் விக்கி கௌஷலும் ஜோடியாக ஊர் சுற்றினார்கள். அதை பார்த்தவர்கள் இந்த ஜோடியை எதிர்பார்க்கவில்லையே என்றனர். விக்கியும், கத்ரீனாவும் காதலிப்பதாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக பாலிவுட்டில் பேச்சாக இருக்கிறது.

காதல்

விக்கி கௌஷலுடனான காதலை கத்ரீனா கைஃப் உறுதி செய்யவில்லை. விக்கியும் அப்படித் தான். இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகனும், நடிகருமான ஹர்ஷ்வர்தனோ, விக்கி கௌஷலும், கத்ரீனா கைஃபும் காதலிப்பதை உறுதி செய்துள்ளார். தான் இவ்வாறு பேசியதற்கு பின்விளைவு ஏதாவது இருக்குமோ என்று வியப்பதாக ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

ஹர்ஷ்வர்தன்

சம்பந்தமே இல்லாமல் விக்கி, கத்ரீனா பற்றி ஹர்ஷ்வர்தன் கபூர் ஏன் பேசினார் என்று நீங்கள் நினைக்கலாம். அவர் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டபோது, பாலிவுட் காதல் வதந்திகளில் எது உண்மை என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று ஹர்ஷ்வர்தனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவரோ, விக்கியும், கத்ரீனாவும் காதலிப்பது உண்மை என்றார்.

விக்கி

முன்னதாக கடந்த ஆண்டு பேட்டி ஒன்றில் விக்கி கௌஷலிடம் கத்ரீனாவுடனான காதல் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவரோ, என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேச விரும்பவில்லை. அது பற்றி பேசினால் யூகங்கள், விவாதங்கள், தவறான புரிதல் ஏற்படும். அது எனக்கு தேவையில்லை என்றார். கடந்த மாதம் 16ம் தேதி விக்கி தன் 33வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்பொழுது அவரின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வாழ்த்தினார் கத்ரீனா. விக்கியுடனான காதலை அவர் உறுதி செய்யவும் இல்லை அதே சமயம் மறுக்கவும் இல்லை.