சின்னத்திரையில் பிரபலமாக இருந்தவர் அந்த விஜே. கெரியர் நன்றாக சென்று கொண்டிருந்தபோது அவரை தேடி பட வாய்ப்புகள் வந்தது. அவரும் வந்த கதாபாத்திரங்களை ஏற்றுக் கொண்டு நடித்து வந்தார். இதற்கிடையே அம்மணிக்கு திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்த கையோடு கணவரை பிரிந்துவிட்டார். பின்னர் படங்களில் கவனம் செலுத்தத் துவங்கினார். பெரிய திரை என்னை அன்புடன் வரவேற்கிறது என்று கூறி சின்னத்திரையை ஒதுக்கி வைத்தார்.

அன்புடன் அழைத்த பெரியதிரை தற்போது அவரை கண்டுகொள்ளவில்லை. ஹீரோயின் ஆகிவிடலாம் என்கிற அவரின் கனவில் மண் விழுந்தது தான் மிச்சம். அவரும் பட வாய்ப்பு பெற பிற நடிகைகள் செய்யும் சில யுக்திகளை கையாண்டும் பலனில்லை.

இதையடுத்து இந்த பழம் புளிக்கிறது என்று கூறி சின்னத்திரைக்கே சென்றுவிடலாம் என்று முடிவு செய்தார். தான் வேலை பார்த்த டிவி சேனலை தொடர்பு கொள்ள அவர்களோ, வேலை காலியில்லை என்று கூறிவிட்டார்களாம்.

ஆக, பெரிய திரை கனவில் இருந்த வேலையையும் இழந்துவிட்டு அம்மணி கவலையில் இருக்கிறாராம்.