ஹைலைட்ஸ்:

  • வெளியானது கமலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்
  • விக்ரம் படத்தில் நடித்து வரும் கமல்

கமல் ஹாசனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. கட்டம் போட்ட சட்டையில் இருக்கும் கமலை பார்த்த ரசிகர்கள் கேட்பது ஒரேயொரு கேள்வியை தான்.

இந்த வயதிலும் உங்களால் மட்டும் எப்படி இவ்வளவு அழகாக இருக்க முடிகிறது என்பதே அந்த கேள்வி. வயது என்பது வெறும் நம்பர் தான் என்பதையும், எந்த வயதிலும் ஃபிட்டாக இருக்கலாம் என்பதையும் உங்களை பார்த்து தெரிந்து கொள்கிறோம்.

அந்த சிரிப்பு இருக்கிறதே சிரிப்பு, சான்சே இல்லை ஆண்டவரே என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். கெரியரை பொறுத்த வரை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார் கமல்.

படப்பிடிப்பு அண்மையில் தான் துவங்கியது. முதல்நாள் படப்பிடிப்பில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கலந்து கொண்டார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

முன்னதாக வெளியான விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கமலுடன் சேர்ந்து விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசிலின் புகைப்படங்களும் இருந்தது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.

விக்ரம் படத்தின் ஹீரோயின் யார் என்பதை தெரிந்து கொள்ள தான் ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள். இதற்கிடையே கமல் கண் பார்வையில்லாதவராக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்டேட் கொடுப்பதில் லோகேஷ் கனகராஜ் கொஞ்சம் கஞ்சம் தான். அதனால் கமல் கதாபாத்திரம் குறித்து அவ்வளவு சீக்கிரத்தில் உறுதி செய்துவிட மாட்டார்.

விக்ரம் படத்தை கமல் மட்டும் அல்ல அவரின் ரசிகர்களும் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள். படத்தில் நடிப்பதுடன் தயாரிக்கவும் செய்கிறார் கமல் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக அவர் ஷங்கர் இயக்கத்தில் நடித்து வந்த இந்தியன் 2 படம் பாதியில் நிற்கிறது. படப்பிடிப்பு மீண்டும் துவங்குமா என்பது கூட தெரியாமல் உள்ளது.

ஓமைகாட், நடிப்புக்கு முழுக்கு போடும் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின்?