இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஷங்கரிடம் இந்தியன் 2 படம் குறித்த அப்டேட் கேட்டுள்ளனர் கமல் ஹாசன் ரசிகர்கள்.

ஷங்கர்

1993ம் ஆண்டு வெளியான ஜென்டில்மேன் படம் மூலம் தமிழ் திரையலகில் இயக்குநராக அறிமுகமானவர் ஷங்கர். முதல் படத்திலேயே அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். இயக்குநர் அவதாரம் எடுத்து 28 ஆண்டுகளாகியும் இன்னும் கோலிவுட்டின் நம்பர் ஒன் படைப்பாளியாக இருக்கிறார் ஷங்கர். அது சாதாரண விஷயம் அல்ல.

பிறந்தநாள்

சாதனை நாயகனாக வலம் வரும் ஷங்கர் இன்று தன் பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், சினிமா ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் கமல் ஹாசன் ரசிகர்களோ, எங்களுக்கு ஒரு உண்மை தெரிந்தாக வேண்டும் ஷங்கர் சார் என்கிறார்கள். எல்லாம் இந்தியன் 2 பட விவகாரம் குறித்து தான்.

இந்தியன் 2

-2

கொரோனா வைரஸ் பிரச்சனை எல்லாம் ஏற்படும் முன்பே ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து வந்தார். படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்த விபத்தில் 3 பேர் பலியாகினர். இதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்ட படப்பிடிப்பு இதுவரை மீண்டும் துவங்கவில்லை. இது தொடர்பாக லைகா நிறுவனம் நீதிமன்றம் வரை சென்றது. ஆனால் இந்தியன் 2 பட வேலை துவங்குவதாக இல்லை.

அப்டேட்

ஷங்கரோ, ராம் சரணை வைத்து தெலுங்கு படத்தை இயக்க தயாராகி வருகிறார். மேலும் அந்நியன் படத்தை இந்தியில் ரீமேக் செய்யவிருக்கிறார். இதை எல்லாம் பார்த்த கமல் ரசிகர்களோ, இந்தியன் 2 படத்தை முடித்து ரிலீஸ் செய்வீர்களா, மாட்டீர்களா என்று ஷங்கரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். உங்களின் பிறந்தநாளான இன்று எங்களுக்கு இந்தியன் 2 பட அப்டேட் வேண்டும் என்று கமல் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.