ஹைலைட்ஸ்:

  • எதற்கும் துணிந்தவனுக்காக பாடல் எழுதிய சிவகார்த்திகேயன்
  • 2022ம் ஆண்டு தியேட்டர்களில் ரிலீஸாகும் எதற்கும் துணிந்தவன்

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் எதற்கும் துணிந்தவன் படம் 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில் படம் குறித்து புது தகவல் வெளியாகியிருக்கிறது. எதற்கும் துணிந்தவனுக்காக ஒரு பாடல் எழுதியிருக்கிறார் சிவகார்த்திகேயன். சிவா மட்டும் அல்ல இயக்குநர் விக்னேஷ் சிவனும் ஒரு பாடலை எழுதியிருக்கிறார்.

எதற்கும் துணிந்தவன் படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயனும், சூர்யாவும் நல்ல நண்பர்கள். இந்நிலையில் தான் அவர் சூர்யா படத்திற்கு பாடல் எழுதியிருக்கிறார். மேலும் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான நம்ம வீட்டுப் பிள்ளை படத்தின் ஹீரோ சிவகார்த்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் எழுதிய பாடல் பற்றி விபரம் தெரியவில்லை. ஆனால் அது காதல் பாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதற்கும் துணிந்தவனில் சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள்மோகன் நடித்திருக்கிறார். சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, இளவரசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

3 ஆண்டுகள் கழித்து சூர்யா நடிப்பில் தியேட்டரில் வெளியாகும் படம் எதற்கும் துணிந்தவன்.

நேற்றிரவு உனக்கும், அனுஷ்காவுக்கும் நிச்சயமாகிடுச்சாமே?: சமந்தா மாஜி கணவரை கேட்ட அப்பா