ஹைலைட்ஸ்:

  • எதற்கும் துணிந்தவன் ரிலீஸ் தேதியை அறிவித்த சன் பிக்சர்ஸ்
  • தியேட்டரில் ரிலீஸாகும் எதற்கும் துணிந்தவன்

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் படம் எதற்கும் துணிந்தவன். சன் பிக்சர்ஸ் நிறுவனம் அந்த படத்தை தயாரித்துள்ளது. எதற்கும் துணிந்தவன் அப்டேட் கொடுப்பீர்களா, மாட்டீர்களா என்று சூர்யா ரசிகர்கள் கேட்டு வந்தார்கள்.

இந்நிலையில் தான் நவம்பர் 19ம் தேதி 12 மணிக்கு எதற்கும் துணிந்தவன் அப்டேட் வெளியிடப்படும் என்று சன் பிக்சர்ஸ் அறிவித்தது. அறிவித்தபடி அப்டேட் வெளியாகியிருக்கிறது.
அதாவது எதற்கும் துணிந்தவன் படம் 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகும் என்று அறிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்பட்ட பிறகு சூர்யாவின் படங்கள் தொடர்ந்து அமேசான் பிரைமில் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் எதற்கும் துணிந்தவனை தியேட்டரில் பார்க்கப் போகும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

இதற்கிடையே ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த ஜெய்பீம் பட பிரச்சனை பெரிதாகியிருக்கிறது. சூர்யாவுக்கு மிரட்டல்கள் வருவதால் அவரின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஒரு நல்ல கலைஞனை இப்படி மிரட்டக் கூடாது, அவருக்கு நாங்கள் இருக்கிறோம் என்று ரசிகர்களும், திரையுலகினரும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கதை சொன்ன இயக்குநருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா: லக்கி மேன்