ஹைலைட்ஸ்:

  • அடுத்தடுத்து பெருமை தேடித் தரும் கூழாங்கல்
  • கூழாங்கல் படத்தால் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஹேப்பி அண்ணாச்சி

நயன்தாராவும், அவரின் காதலரும், இயக்குநருமான விக்னேஷ் சிவனும் சேர்ந்து ரௌடி பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி நடத்தி வருகிறார்கள். பி.எஸ். வினோத்ராஜ் இயக்கிய கூழாங்கல் படத்தை அவர்கள் தயாரித்தனர்.

ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் கூழாங்கல் படத்திற்கு டைகர் விருது கிடைத்தது. டைகர் விருதை பெற்ற முதல் தமிழ் படம் கூழாங்கல் ஆகும். மேலும் டைகர் விருது வென்ற இரண்டாவது இந்திய படம் கூழாங்கல்.
இந்நிலையில் ஆகஸ்ட் 12ம் தேதி துவங்கி நடந்து வரும் IFFSA டொரண்டோ விழாவுக்கு கூழாங்கல் படத்தை தேர்வு செய்துள்ளனர். அது குறித்து அறிந்து நயன்தாரா, விக்னேஷ் சிவன், வினோத் ராஜ் ஆகியோர் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்த கையோடு மேலும் ஒரு நல்ல செய்தி அவர்களை தேடி வந்திருக்கிறது.
அதாவது மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழாவுக்கும் கூழாங்கல் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இரண்டு விழாக்களிலுமே கூழாங்கல் நிச்சயம் அனைவரையும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தாங்கள் தயாரித்த கூழாங்கல் படத்திற்கு சர்வதேச அளவில் அதுவும் அடுத்தடுத்து அங்கீகாரம் கிடைத்து வரும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும். கூழாங்கல் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா பட்ட கஷ்டமெல்லாம் இப்படி நாசமாப் போச்சே!