ஹைலைட்ஸ்:

  • பட வாய்ப்பை இழந்த நயன்தாரா
  • நயன்தாராவுக்கு பதில் நடிக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவன தயாரிப்பில் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார் நயன்தாரா. போட்டா போட்டி, தெனாலிராமன், எலி ஆகிய படங்களை இயக்கியவர் யுவராஜ்.

இந்நிலையில் யுவராஜின் படத்தில் நயன்தாராவுக்கு பதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறாராம். இது குறித்து படக்குழுவுக்கு நெருக்கமான ஒருவர் கூறியதாவது,

நயன்தாராவின் பாலிவுட் படப்பிடிப்பு தாமதவதால் யுவராஜ் படத்தில் அவர் நடிக்க மாட்டார். அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுடன் சேர்ந்து நடிக்கும் பட வேலை தாமதமாகிவிட்டதால் டேட்ஸ் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

நயன்தாரா இல்லாத காட்சிகளை யுவராஜ் ஏற்கனவே படமாக்கத் துவங்கினார். பாலிவுட் பட ஷெட்யூலை முடித்துவிட்டு வருவார் நயன்தாரா என்று படக்குழு காத்திருந்தது. தற்போது மீண்டும் படப்பிடிப்பை துவங்கவிருக்கிறார்கள். ஆனால் நயன்தாரா தன் பாலிவுட் படத்தில் நடிக்க வேண்டியிருக்கிறது.

நயன்தாராவால் டேட்ஸ் கொடுக்க முடியாமல் போய்விட்டதால் வேறு ஒரு நடிகையை நடிக்க வைக்கிறார்கள் என்றார்.

தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபுவிடம் கேட்டதற்கு, மூன்று ஜோடிகள் தொடர்பான அந்த படத்தில் நயன்தாராவுக்கு பதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார் என்றார்.

ஷாருக்கானின் மகன் ஆர்யன் போதை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதனால் மகனை வெளியே கொண்டு வருவதில் ஷாருக்கான் பிசியாக இருந்தார். அந்த காரணத்தால் தான் அட்லி பட வேலை தாமதமாகிவிட்டது.

தன் பட இயக்குநரை சிம்பிளாக பதிவுத் திருமணம் செய்த பிரபல நடிகை