ஹைலைட்ஸ்:

  • எண் 5 பற்றி பேசிய கமல் ஹாசன்
  • கமலின் அரசியல் பேச்சை கேட்க ரசிகர்கள் ஆர்வம்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் துவங்கிவிட்டது. முந்தைய நான்கு சீசன்களை போன்று இந்த சீசனையும் கமல் ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் தெரியாத முகங்கள் அதிகம் இருப்பதாகவும், பிக் பாஸ் வீடு மகளிர் விடுதி போன்று இருப்பதாகவும் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தெரிந்த முகங்களாக அழைத்து வந்தாலும் குறை சொல்கீறீர்கள், புதுமுகங்களை அழைத்து வந்தாலும் குறைபாடுகிறீர்கள். யாரு தான்யா உங்களுக்கு போட்டியாளராக வர வேண்டும் என்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் தீவிர ரசிகர்கள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 5. இந்த 5 எனக்கு ரொம்ப ஸ்பெஷல் என்று கமல் கூறியதை பார்த்தவர்கள், கண்டிப்பாக தான் 5 வயதில் நடிக்க வந்ததை பற்றி பேச மாட்டார் என்று நினைத்தார்கள். ஆனால் அவரோ, நான் 5 வயசுல நடிக்க ஆரம்பிச்சேன் என்றார்.

என்ன ஆண்டவரே இப்படி பண்ணிட்டீங்களே என்று சமூக வலைதளங்களில் கிண்டல் செய்கிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சி போர் என்று சொல்பவர்கள் கூட வார இறுதி நாட்களில் கமல் பேசுவதை பார்க்க டிவி முன்பு வந்துவிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சீசனில் என்ன அரசியல் பேசப் போகிறாரோ என்கிற எதிர்பார்ப்பு இல்லாமல் இல்லை.

அப்பாடா, வேண்டுனது வீண் போகல: மகிழ்ச்சியில் பிக் பாஸ் 5 பார்வையாளர்கள்