Memes
oi-Jaya Chitra
சென்னை: மத்திய பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் மூன்று பெண்களைக் காதலித்து, திருமணம் செய்து கொண்ட சம்பவத்தைக் கேள்விப்பட்டு, பொறாமையில் தங்களது ஆதங்கத்தை மீம்ஸ்களாக வெளிப்படுத்தி வருகின்றனர் இன்னமும் திருமணமாகாத 90ஸ் கிட்ஸ்கள்.

‘காத்து வாக்குல ரெண்டு காதலை’யே இன்னமும் புரிந்து கொள்ள முடியாமல் மக்கள் குழம்பி வரும் நிலையில், ஒரே நேரத்தில் மூன்று பெண்களைக் காதலித்து, ஒரே நேரத்தில் அவர்களைத் திருமணமும் செய்து அச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளார் மத்திய பிரதேச இளைஞர் ஒருவர்.

மத்திய பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தில் உள்ள நன்பூரில் பழங்குடி வகுப்பை சேர்ந்த சமர்த் மவுரியா தான் அந்த இளைஞர். கடந்த 15 ஆண்டுகளாக அந்த மூன்று பெண்களுடனும் லிவிங் ரிலேஷன்ஷிப் உறவு முறையில் வாழ்ந்து வந்த, அவர் தற்போது முறைப்படி திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். இணையத்தில் டிரெண்டிங்கான இந்த செய்தியை வைத்து, இன்னமும் திருமணம் ஆகாமல், நொந்து நூடுல்ஸ் ஆகி வரும் 90ஸ் கிட்ஸ் பேச்சிலர்கள், மீம்ஸ் போட்டு தங்களது ஆதங்கத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.

இதோ அப்படியான சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக…
English abstract
Those are some jolly memes assortment on 90s children and their marriage.
Tale first revealed: Sunday, Might 15, 2022, 14:27 [IST]