ஹைலைட்ஸ்:

  • ஷகீலா இறந்ததாக பரவிய வதந்தி
  • வதந்தி குறித்து ஷகீலா விளக்கம்

80களில் கவர்ச்சியை காட்டி ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருந்தவர் ஷகீலா. அவர் படம் ரிலீஸாகிறது என்றால் தியேட்டர்களில் கூட்டம் அலை மோதும். ஆனால் தற்போது அவரின் இமேஜ் தலைகீழாக மாறிவிட்டது.

குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ரசிகர்கள் ஷகீலாவை பார்க்கும் விதம் மாறிவிட்டது. அவர் திருநங்கை மகளை தத்தெடுத்து வளர்ப்பது பலரையும் கவர்ந்திருக்கிறது. ரசிகர்கள் ஷகீலாவை அன்போடு அம்மா என்று அழைக்கிறார்கள்.

இந்நிலையில் ஷகீலா இறந்துவிட்டார் என்கிற தகவல் தீயாக பரவியது. நல்லாத் தானே இருந்தார், திடீர் என்று எப்படி மரணம் என ரசிகர்கள் பதட்டம் அடைந்தார்கள்.

அதன் பிறகே ஷகீலா இறக்கவில்லை என்பது தெரிய வந்தது. வதந்தி குறித்து ஷகீலா வீடியோ மூலம் விளக்கம் அளித்திருக்கிறார்.

அந்த வீடியோவில் ஷகீலா கூறியிருப்பதாவது,
நான் இறந்துவிட்டதாக கேள்விப்பட்டேன். அப்படி எல்லாம் எதுவும் இல்லை. நான் ஆரோக்கியமாகவும், சந்தோஷமாகவும், சிரித்த முகமாகவும் இருக்கிறேன்.

யாரோ என்னை பற்றி வதந்தியை பரப்பியிருக்கிறார்கள். ஆனால் எனக்கு ஏகப்பட்ட போன் கால்கள் வந்தது. உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி. அதே சமயம் வதந்தியை பரப்பியவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

ஷகீலாவின் வீடியோவை பார்த்த பிறகே ரசிகர்கள் நிம்மதி அடைந்தார்கள். உடம்பை பார்த்துக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.

டிவிக்கு வரும் விஜய் சேதுபதி ‘மகள்’: சம்பளம் ரூ. 1 கோடிப்பு