ஹைலைட்ஸ்:

  • தம்பி பாப்பா பிறந்திருக்கான்- அஸ்வந்த்
  • சூப்பர் டீலக்ஸ் படம் மூலம் பிரபலமான அஸ்வந்த்

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்த சூப்பர் டீலக்ஸ் படத்தில் அவரின் மகன் ராசுகுட்டியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் அஸ்வந்த். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அஸ்வந்த் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்.

தனுஷின் ஜகமே தந்திரம் தான் அஸ்வந்த் நடிப்பில் கடைசியாக வெளியான படம். இந்நிலையில் குட் நியூஸ் சொல்லியிருக்கிறார் அஸ்வந்த்.

கர்ப்பமாக இருந்த அஸ்வந்தின் அம்மா அகிலா ஆண் குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார். இந்நிலையில் குட்டி பாப்பாவுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, எனக்கு தம்பி பாப்பா பிறந்திருக்கான் என்று தெரிவித்துள்ளார் அஸ்வந்த்.

அஸ்வந்தின் போஸ்ட்டை பார்த்த ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அஸ்வந்த் படங்களில் நடிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் இயக்குநர் அவதாரமும் எடுத்திருக்கிறார். ஒண்டிபுலி என்கிற குறும்படத்தை எழுதி, இயக்கி, யூடியூப் சேனலில் அப்லோடு செய்திருக்கிறார் அஸ்வந்த்.

இது தவிர்த்து கொரோனா வைரஸ் பிரச்சனை காலத்தில் எதை செய்யலாம், செய்யக் கூடாது என்றும் கூறி வீடியோ வெளியிட்டிருக்கிறார் அஸ்வந்த்.

Nayanthara: கைவிட்டுட்டேனா, நானா?, ஆக்ஷனில் இறங்கிய விக்னேஷ் சிவன்