ஹைலைட்ஸ்:

  • தோல் வியாதி பற்றி பேசிய யாமி கௌதம்
  • குறையை ஏற்றுக் கொண்ட யாமி கௌதம்

கௌரவம் படம் மூலம் கோலிவுட்டுக்கு வந்தவர் பாலிவுட் நடிகை யாமி கௌதம். அவர் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், பஞ்சாபி, கன்னட மொழி படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது அவர் இந்தி படங்களில் தான் கவனம் செலுத்தி வருகிறார். தான் நடித்த யுரி படத்தை இயக்கிய ஆதித்யா தாரை காதலித்து கடந்த ஜூன் மாதம் 4ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் தனக்கு தோல் வியாதி இருப்பதாக யாமி கௌதம் சமூக வலைதளத்தில் போஸ்ட் போட்டிருக்கிறார்.

அந்த போஸ்ட்டில் யாமி கூறியிருப்பதாவது,

ஹலோ என் இன்ஸ்டா குடும்பத்தார், நான் அண்மையில் சில புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தேன். எனக்கு இருக்கும் தோல் வியாதியான Keratosis- Pilaris பாதிப்பை மறைக்க போஸ்ட் ப்ரொடக்ஷனுக்கு செல்லும் முன்பு நான் நினைத்தேன், ஹே யாமி, நீ ஏன் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று. அப்படியே இருக்கட்டும்…

இந்த வியாதி இருந்தால் தோலில் சிறு சிறு தடிப்புகள் போன்று இருக்கும். அது நீங்களும், பக்கத்து வீட்டு ஆன்ட்டியும் நினைப்பது போன்று மோசம் இல்லை. எனக்கு டீனேஜில் இந்த பிரச்சனை ஏற்பட்டது. அதை குணப்படுத்த முடியாது.

பல ஆண்டுகளாக இந்த பிரச்சனை இருக்கிறது. ஆனால் இன்று தான் என் பயத்தை விட்டுவிட்டு, குறைகளை முழுமனதுடன் ஏற்றுக் கொள்ள தைரியம் வந்தது. மேலும் என்னை பற்றிய உண்மையை உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் தைரியமும் வந்தது.

இந்த குறையுடனேயே நான் அழகாக உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

போதை பார்ட்டி: அதிகாரிகளிடம் ஷாருக்கான் மகன் சிக்கியது எப்படி தெரியுமா?