ஹைலைட்ஸ்:

  • இந்தி வெப் தொடரில் நடிக்கும் விஜய் சேதுபதி
  • மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடிக்கும் ராஷி

தமிழ் திரையுலகின் பிசியான நடிகரான விஜய் சேதுபதி சர்ச்சைக்குரிய தி ஃபேமிலி மேன் 2 வெப்தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டிகேவின் இயக்கத்தில் நடிக்கிறார். இந்தியில் உருவாகி வரும் அந்த வெப் தொடரில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் நடிக்கிறார்.

மேலும் ராஷி கன்னாவும் நடிக்கிறார். ராஷி கன்னா முன்னதாக சங்கத்தமிழன், துக்ளக் தர்பார் ஆகிய படங்களில் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடித்திருக்கிறார். விஜய் சேதுபதி, ராஷி கன்னா இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்த துக்ளக் தர்பார் படம் இன்னும் ரிலீஸாகவில்லை.

இந்நிலையில் ராஜ் மற்றும் டிகே இயக்கும் தொடர் மூலம் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடிப்பது குறித்து ராஷி கன்னா ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது,

எனக்கு பிடித்த மனிதர், நடிகருடன் சேர்ந்து மூன்றாவது முறையாக நடிக்கிறேன். இம்முறை இந்தியில். எங்கள் செட்டுக்கு வரவேற்கிறோம் என தெரிவித்துள்ளார்.

ராஜ் மற்றும் டிகே இயக்கி வரும் இந்தி வெப் தொடர் ஷூட்டிங்கில் கலந்து கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. இதற்கிடையே விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடிக்க காத்துக் கொண்டிருப்பதாக ஷாஹித் கபூர் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டிருந்தார்.

இந்த தொடருக்கான அவரின் புது லுக் புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார்.

அடடே, விஜய் சேதுபதி ஒரு ‘சா…. பி’..னு தெரியாமப் போச்சே