90 களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நெப்போலியன். கதாநாயகன், வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக பல படங்களில் நடித்துள்ள இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார் இந்நிலையில் நடிகர் நெப்போலியன் தன்னுடைய வலைத்தள ஷேர் செய்துள்ள பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகராக மட்டுமல்லாமல் அரசியல்வாதி, தொழில் அதிபர் என பல முகங்களை கொண்ட நெப்போலியன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அமைச்சரவையில் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். தற்போதும் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் சுல்தான் திரைப்படம் வெளியானது. அண்மையில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் வெளியான சுல்தான் திரைப்படத்தில் கார்த்திக் அப்பாவாக நடித்திருந்தார் நெப்போலியன்.

ட்ராப் சிட்டி, ஒன் மோர் ட்ரீம் உள்ளிட்ட ஒருசில ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார் நெப்போலியன். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. நெப்போலியன் நடிகர் சங்கத்தின் துணை தலைவராக இருந்த போது எடுக்கப்பட்ட வீடியோ அது.

சமந்தாவின் ரசிகர்களாக மாறிய ரகுல் ப்ரீத் சிங் குடும்பம்: காரணம் என்ன தெரியுமா..?
விஜய்காந்த் நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த போது நெப்போலியன் துணைத்தலைவராக இருந்தார். அப்போது நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சூர்யா, மாதவன், ஷியாம், அஜித், வடிவேலு, ஜோதிகா, மனோரமா, ரோஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பேசும் ரஜினிகாந்த், நடிகர் சங்க தலைவர் விஜயகாந்த் துணை தலைவர்கள் சரத்குமார், மற்றும் நெப்போலியன் ஆகியோரை பாராட்டுகிறார்.

இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நெப்போலியன், இந்த வீடியோவை மீண்டும் பார்வையிட்டதில் மகிழ்ச்சி, அதைப் பகிரவும் நினைத்தேன்! என்னுடைய திரையுலக வாழ்க்கையின் அழகான நாட்கள் இவை. அப்போது நான் நடிகர் சங்கத்தின் துணைத் தலைவராகவும் இருந்தேன் என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.