ஹைலைட்ஸ்:

  • மே 20 ஆம் தேதி கேரளா முதல்வராக பொறுப்பேற்கும் பினராயி விஜயன்.
  • கொரோனாவை திறமையாக கையாணட் சுகாரத்துறை அமைச்சர் சைலஜா மாற்றம்.
  • சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா மாற்றம் குறித்து மாளவிகா மோகனன் கேள்வி.

மாஸ்டர் திரைப்படத்தில் நடிகர் விஜய் ஜோடியாக நடித்து பிரபலமானவர் மாளவிகா மோகனன். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் இவர், தன்னை பற்றி வரும் நக்கல் மீம்களுக்கும் விளையாட்டாக எடுத்து கொண்டு பதிலளிப்பார். இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் கேரளா முதல்வர் பினராயி விஜயனிடம் கேள்வி எழுப்பி பரபரப்பை பற்ற வைத்துள்ளார் மாளவிகா மோகனன்.

கேரளாவில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பினராயி விஜயனின் தலைமையிலான ஆளும் இடதுசாரி கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்நிலையில் வருகின்ற 20 ஆம் தேதி மீண்டும் கேரளா முதல்வராக பதவியேற்க உள்ளார் பினராய் விஜயன். பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள சுமார் 500 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் அரசு இது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது என நடிகை பார்வதி மேனன் உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனனும் வேறு விஷயத்துக்காக முதல்வர் பினராயி விஜயனை விமர்சித்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. அதாவது புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சரவையில் தற்போது சுகாதாரத் துறை அமைச்சராக இருக்கும் சைலஜா அவர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அச்சுறுத்தும் கொரோனா: ஓடிடி பக்கம் ஒதுங்கிய அஜித் பட ஹீரோயினின் புதிய திரைப்படம்!
இது கேரள மாநில மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் கொரோனா முதல் அலை ஏற்பட்டபோதும் தற்போது ஏற்பட்டிருக்கும் இரண்டாவது அலையின்போதும், மிகவும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுத்தவர் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா. அவருடைய அதிரடி நடவடிக்கையால் தான் கேரளாவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டது என்று கேரளா வாழ் மக்கள் உறுதியாக நம்புகின்றனர்.

இந்நிலையில் திடீரென அவர் புதிய அமைச்சரையில் இருந்து நீக்கப்பட்டது கேரள மக்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. இதனை தொடர்ந்து விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தில் நடித்த நடிகை மாளவிகா மோகனன் தனது டுவிட்டரில், ‘மிகச்சிறந்த அமைச்சர்களில் ஒருவரான சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா அவர்களை அமைச்சரவையிலிருந்து நீக்கி விட்டீர்களே? என்ன நடக்குது முதல்வர் அவர்களே? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனை தொடர்ந்து அரசை நோக்கி கேள்வி எழுப்பியுள்ள நடிகை மாளவிகா மோகனனுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலவித கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. பார்வதி மேனனை தொடர்ந்து நடிகை மாளவிகா மோகனனும் கேரளா முதல்வரை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.