ஹைலைட்ஸ்:

  • மதம் மாற்றம் குறித்து ராமராஜன் விளக்கம்
  • எம்மதமும் என் மதம் என்கிறார் ராமராஜன்

80கள், 90களில் முன்னணி நடிகராக இருந்த ராமராஜன் ஒரு இயக்குநரும் கூட. அவருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. அவர் வீட்டில் இருக்கும் ஏசியை பழுதுபார்க்க ஆள் வந்த பிறகு தனக்கு மூச்சுவிடுவதில் சிரமமாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தபோது கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார்.

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அவர், தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும், சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும் நன்றி தெரிவித்து உருக்கமான அறிக்கையை வெளியிட்டார்.

இந்நிலையில் ராமராஜன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டதாக தகவல் வெளியானது. ராமராஜன் ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்தார் என தெரியவில்லையே என்று பேச்சு கிளம்பியது. இது குறித்து ராமராஜனே விளக்கம் அளித்திருக்கிறார்.

மதம் மாறிய தகவல் பற்றி ராமராஜன் கூறியதாவது,

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இப்போது தான் மீண்டு வந்திருக்கிறேன். நான் நடிகனானபோதே எம்மதமும் என் மதம் தான் என்கிற மனநிலைக்கு வந்துவிட்டேன்.

நான் கோவிலுக்கும் செல்வேன், தேவலாயத்திற்கும் போவேன், அதே சமயம் தர்காவுக்கும் செல்வேன்.

அரசியலுக்கு வந்த பிறகு நான் எப்படி ஒரு மதத்தில் மட்டும் இருக்க முடியும். எனக்கு எல்லோருமே வேண்டும். நான் சாதி, மதம் எல்லாம் பார்ப்பதே இல்லை என்றார்.

விபத்து நடந்த இரவு நடந்தது என்ன?: யாஷிகாவின் நண்பர் புது தகவல்