ஹைலைட்ஸ்:

  • பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்த அபிஷேக்
  • தற்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அபிஷேக்

பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் அபிஷேக் ராஜாவுக்கு ஏகப்பட்ட ஹேட்டர்ஸ் இருக்கிறார்கள். சமூக வலைதளங்களில் அவரை தான் தினமும் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியையும், அதை தொகுத்து வழங்கி வரும் உலக நாயகன் கமல் ஹாசனையும் அபிஷேக் ராஜா மோசமாக பேசிய வீடியோ வெளியாகி வைரலானது.

கிடைச்ச 100 நாள்ல நீ தமிழ்நாடு சி.எம். ஆகணும்னு பண்ற வேலை இருக்கே: கமலை திட்டிய பிக் பாஸ் 5 போட்டியாளர்அந்த வீடியோவில் அபிஷேக் கூறியதாவது,

ஊருக்கே தெரியும்டா உங்களை கேமரா வச்சு எடுத்துக்கிட்டு இருக்காங்கனு. ஆனால் கிடைச்ச 100 நாள்ல நீ தமிழ்நாடு சி.எம். ஆகணும் என்பதற்காக பண்ற வேலைலாம் இருக்கு தெரியுமா?. முடியலடா என்னால, கேட்டால் பிக் பாஸுங்கிறீங்க என்றார்.

வீடியோ வைரலானது தெரியாமல் அபிஷேக் பிக் பாஸ் வீட்டில் சீன் போட்டுக் கொண்டிருக்கிறார். சனிக்கிழமை வரும்போது கமல் ஹாசன் அபிஷேக்கை பிடிபிடி என்று பிடிப்பாரா என பார்வையாளர்கள் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அபிஷேக் தங்கள் நிகழ்ச்சியை அசிங்கப்படுத்தியது தெரிந்தும் அவரை பிக் பாஸ் போட்டியாளராக்கியதற்கு ஒரு காரணம் இருக்கு என்று பார்வையாளர்கள் கூறுகிறார்கள். அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சிப்பது எளிது, கேமராக்களுக்கு மத்தியில் இருப்பது கடினம், அதை உணர்ந்து பார் என்பதற்காகத் தான் அபிஷேக்கை தேர்வு செய்திருக்கிறார்கள் என்கிறார்கள் பார்வையாளர்கள்.
நீ நல்லா இருப்பியா?: பாவனியால் பிக் பாஸை விளாசும் பார்வையாளர்கள்இதற்கிடையே அபிஷேக்கிடம் இருந்து தள்ளியே இருக்குமாறு பாவனி ரெட்டியை அவரின் ஆதரவாளர்கள் எச்சரித்துள்ளனர்.