ஹைலைட்ஸ்:

  • திருமண பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ருதி
  • லாக்டவுனில் காதலருக்கு சமைத்துக் கொடுக்கும் ஸ்ருதி
  • பிரபாஸின் சலார் பட ஹீரோயின் ஸ்ருதி ஹாசன்

ஸ்ருதி ஹாசனும், டெல்லியை சேர்ந்த டூடுல் கலைஞர் சாந்தனு ஹசாரிகாவும் காதலித்து வருகிறார்கள். ஸ்ருதியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து சாந்தனு இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டபோது தான் அவர்கள் காதலிப்பது பலருக்கும் தெரிய வந்தது.

கொரோனாவின் இரண்டாம் அலையால் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்ருதி மும்பையில் இருக்கும் தன் வீட்டில் இருக்கிறார். அவருக்கு துணையாக சாந்தனு இருக்கிறார். சாந்தனுவுக்கு வகை, வகையாக சமைத்துக் கொடுத்து அசத்திக் கொண்டிருக்கிறார் ஸ்ருதி.

இந்நிலையில் ஸ்ருதி ஹாசனுக்கு ரகசிய திருமணம் நடந்துவிட்டதாக பேச்சு கிளம்பியது. ஸ்ருதி சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்பொழுது ஒரு ரசிகரோ, உங்களுக்கு திருமணமாகிவிட்டதா என்று கேட்டார். அதற்கு ஸ்ருதியோ இல்லை என்று பதில் அளித்தார்.

ஸ்ருதிக்கு தன் பர்சனல் வாழ்க்கை பற்றி பேசப் பிடிக்காது. பர்சனல் பற்றி பேசினால் அனைவரும் தன் படங்களை விட்டுவிட்டு தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தான் பேசுவார்கள் என்பதால் ஸ்ருதி அப்படி ஒரு முடிவில் இருக்கிறார்.

கடந்த லாக்டவுனின்போது தனியாக மாட்டிக் கொண்ட ஸ்ருதி, இம்முறை துணைக்கு ஆள் இருப்பதால் சந்தோஷமாக இருக்கிறார். இது போன்ற நேரத்தில் மனநலனில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம் என்று ஸ்ருகி கூறி வருகிறார். இது தொர்பாக அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டுக் கொண்டிருக்கிறார். மனநலம் குறித்த அவரின் போஸ்ட்டுகளுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

கெரியரை பொறுத்தவரை எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து லாபம் படத்தில் நடித்துள்ளார். மேலும் கே.ஜி.எஃப். படம் புகழ் பிரசாந்த் நீல், பிரபாஸை வைத்து இயக்கி வரும் சலார் படத்தில் ஸ்ருதி தான் ஹீரோயின். பல ஆண்டுகளாக தெலுங்கு திரையுலகில் இருந்தாலும் தற்போது தான் ஸ்ருதி முதல் முறையாக பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

கழுத்தை நெறிக்கும் கடன்: சன் டிவியுடன் 5 பட டீலில் கையெழுத்திட்ட சிவகார்த்திகேயன்