ஹைலைட்ஸ்:

  • மீரா சோப்ரா காவல் நிலையத்தில் புகார்
  • இன்டீரியர் டிசைனர் மீது மீரா சோப்ரா புகார்

பிரபல பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ராவின் உறவினர் நடிகை மீரா சோப்ரா. எஸ்.ஜே. சூர்யாவின் அ..ஆ உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.

அவர் மும்பை அந்தேரி பகுதியில் வீடு கட்டி வருகிறார். அதற்காக இன்டீரியர் டிசைனர் ராஜிந்தர் திவான் என்பவரை வேலைக்கு வைத்திருக்கிறார். இந்நிலையில் ராஜிந்தர் தன்னை திட்டி, தாக்கி, தன் வீட்டில் இருந்தே வெளியே தள்ளியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் மீரா சோப்ரா.

அவரின் புகாரின்பேரில் ராஜிந்தர் திவான் மீது 4 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது குறித்து மீரா சோப்ரா கூறியதாவது,

ரூ. 17 லட்சத்திற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. அதில் பாதி தொகை முன்கூட்டியே கொடுக்குமாறு கேட்டார். அந்த டிசைனரை தெரியாதபோதும் நம்பி பணத்தை கொடுத்தேன். எனக்கு பனாரஸில் ஷூட்டிங் இருந்தது.

அந்த டிசைனர் தரமற்ற பொருட்களை பயன்படுத்தி வந்தார். மரம் மற்றும் பிளைவுட்டை மாற்றுமாறு கூறியதற்கு, பணியாட்கள் வேலையை நிறுத்திவிடுவார்கள் என்றார். என்னை திட்டியதுடன், வீட்டை விட்டு வெளியே தள்ளினார். என் வீட்டில் இருந்தே என்னை வெளியே பிடித்து தள்ளினார் என்றார்.

டாக்டர் ரிலீஸுக்கு 1 மணிநேரத்திற்கு முன்பு ரூ. 25 கோடி கொடுத்த சிவகார்த்திகேயன்: ஏன் தெரியுமா?