ஹைலைட்ஸ்:

  • என் பில்களை நான் தான் கட்டுகிறேன்- ஸ்ருதி ஹாசன்
  • அப்பாவோ, அம்மாவோ எனக்கு உதவி செய்வது இல்லை- ஸ்ருதி
  • லாக்டவுன் முடிந்ததும் வேலைக்கு கிளம்பிய வேண்டியது தான்- ஸ்ருதி

உலக நாயகன் கமல் ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். கொரோனாவின் இரண்டாம் அலை மோசமாகியுள்ள நேரத்திலும் ஸ்ருதி இரண்டு படங்களில் வேலை செய்துள்ளார்.

இது குறித்து அவர் பேட்டி ஒன்றில் கூறியதாவது,

கொரோனா வைரஸ் பிரச்சனை தீரும் வரை காத்திருக்க முடியாது. இது போன்ற சூழலில் படப்பிடிப்பில் கலந்து கொள்வது கடினம் தான். மாஸ்க் இல்லாமல் படப்பிடிப்பு தளத்தில் இருப்பது பயமாக இருக்கிறது. நான் பொய் சொல்லவில்லை. ஆனால் மற்றவர்களை போன்று எனக்கும் நிதி சிக்கல் இருப்பதால் வேலைக்கு செல்ல வேண்டியிருக்கிறது.

படப்பிடிப்பை துவங்க அவர்கள் தயாராகிவிட்டால் நான் கிளம்ப வேண்டியது தான். நாம் ஒவ்வொரும் கட்டணங்களை செலுத்த வேண்டியிருக்கிறது. அதற்கு நாம் மீண்டும் வேலைக்கு செல்ல வேண்டும்.

என் பில்களை நான் தான் கட்டுகிறேன். எனக்கு அப்பாவோ, அம்மாவோ உதவி செய்வது இல்லை என்றார்.

தன் அப்பா, அம்மாவை சார்ந்திராது தனியாக வாழ்கிறார் ஸ்ருதி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவருக்கும் நிதி சிக்கல் என்பதை தான் நம்ப முடியவில்லை என்கிறார்கள் சினிமா ரசிகர்கள். மேலும் கமல் தன் மகளுக்கு உதவி செய்வது இல்லையா என்று பலரும் வியந்து பேசுகிறார்கள்.

கெரியரை பொறுத்தவரை கே.ஜி.எஃப் படம் புகழ் பிரசாந்த் நீல் பிரபாஸை வைத்து இயக்கும் சலார் படத்தில் நடித்து வந்தார் ஸ்ருதி. அவர் பிரபாஸ் ஜோடியாக நடிப்பது இதுவே முதல் முறை ஆகும்.

இந்நிலையில் கோபிசந்த் இயக்கும் படம் ஒன்றில் சீனியர் நடிகரான பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார் ஸ்ருதி என்று தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னதாக கோபிசந்த் இயக்கிய பலுப்பு, கிராக் ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்தார் ஸ்ருதி.

அவருக்கு உங்கப்பா வயசு, வேண்டாம் ஸ்ருதி, விஷ பரீட்சை: ரசிகர்கள் எச்சரிக்கைஅந்த பழக்கத்தில் தான் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம். ஆனால் பாலகிருஷ்ணாவுடன் சேர்ந்து நடிக்க வேண்டாம் என்று ரசிகர்கள் ஸ்ருதியை எச்சரித்துள்ளனர்.