ஹைலைட்ஸ்:

  • சிம்புவின் கோ பட புகைப்படங்கள் வெளியாகி வைரல்
  • கோ புகைப்படங்களை பார்த்து சிம்புவை கேள்வி கேட்கும் ரசிகர்கள்
  • சிம்பு விலகியதால் கோ படத்தில் நடித்த ஜீவா

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் ஜீவா, கார்த்திகா நாயர், பியா பாஜ்பாய் உள்ளிட்டோர் நடித்த கோ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஜீவாவின் கெரியரில் முக்கியமான படமாக அமைந்துவிட்டது கோ. ஆனால் அந்த படத்தில் சிம்பு தான் ஹீரோவாக நடிப்பதாக இருந்தது. அவர் விலகவே ஜீவாவை நடிக்க வைத்தார் கே.வி. ஆனந்த்.

இதை அவரே பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த கே.வி. ஆனந்த் கடந்த மாதம் 30ம் தேதி உயிரிழந்தார். அவருக்கு இரங்கல் தெரிவித்த சிம்பு கோ படம் பற்றி பேசியிருந்தார்.

மேலும் கே.வி. ஆனந்த் தன்னிடம் கதை ஒன்று சொல்ல அது தனக்கு பிடித்துப் போய் படம் பண்ணலாம் சார்னு சொல்லியிருந்ததாக சிம்பு தெரிவித்தார். ஆனால் அதற்குள் கே.வி. ஆனந்த் இறந்துவிட்டார்.

சிம்பு, கே.வி. ஆனந்த் கூட்டணி சேர வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. இந்நிலையில் கோ படத்தில் சிம்பு நடித்த சில காட்சிகளின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
அந்த புகைப்படங்களை பார்த்த சிம்பு ரசிகர்களுக்கு கண் கலங்கிவிட்டது. பல ஆண்டுகள் கழித்து சிம்புவை இப்படி பார்த்ததும் ஃபீல் பண்ணிவிட்டார்கள்.

புகைப்படங்கள் செமயாக இருக்கிறது. படத்தின் கதை அருமை. அப்படி இருந்தும் ஏன் நீங்கள் நடிக்கவில்லை சிம்பு. என்ன நடந்தது, உண்மையை சொல்லுங்கள் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Maanaadu First Single: துக்கத்தில் வெங்கட் பிரபு, யுவன்: ரம்ஜானுக்கு மாநாடு முதல் சிங்கிள் வெளியாகாதுகெரியரை பொறுத்த வரை வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்துள்ளார் சிம்பு. அந்த படத்தின் முதல் சிங்கிள் ரம்ஜான் பண்டிகை அன்று வெளியிடப்படும் என்று அறிவித்தார்கள். இந்நிலையில் வெங்கட் பிரபுவின் அம்மா மணிமேகலை இறந்துவிட்டார். துக்கமான இந்த நேரத்தில் முதல் சிங்கிளை ரம்ஜானுக்கு வெளியிடப் போவது இல்லை என்று மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.

மாநாடு படம் ரிலீஸான பிறகு சிம்புவின் கெரியர் வேல லெவலுக்கு சென்றுவிடும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.