பிரபல பாடகரும், இசையமைப்பாளருமான யோ யோ ஹனி சிங் என்பவருக்கும் ஷாலினி தல்வார் என்பவருக்கும் கடந்த 2011ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஹனி சிங் தன்னை கொடுமைப்படுத்துவதாக டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் ஷாலினி. இந்நிலையில் அவரின் குற்றச்சாட்டை மறுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் யோ யோ ஹனி சிங்.

ஹனி சிங் தன்னை உடல் அளவிலும், மனதளவிலும் பலமுறை கொடுமைப்படுத்தியதாகவும், ஹனி சிங் தன் பாடல்கள், நிகழ்ச்சிகள், ராயல்டிகள் மூலம் மாதம் ரூ. 4 கோடி சம்பாதித்ததாகவும் அந்த நேரத்தில் தான் அவர் மது, போதைப்பொருளுக்கு அடிமையானார் என்றும் தன்னுடைய மனுவில் குறிப்பிட்டுள்ளார் ஷாலினி தல்வார். மேலும் அவருக்கு வேறு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும், தன்னை அவர் அடித்து துன்புறுத்துவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து யோ யோ ஹனி சிங், இன்ஸ்டா பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு விளக்கமளித்துள்ளார். அதில், எனது பாடல் வரிகள், என் உடல்நலம் பற்றிய ஊகங்கள், மற்றும் பொதுவாக எதிர்மறை ஊடக கவரேஜ் ஆகியவற்றிற்காக கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானாலும் கடந்த காலங்களில் நான் ஒரு பொது அறிக்கையையோ அல்லது பத்திரிகை குறிப்பையோ வெளியிடவில்லை.

நயன்தாராவிடம் ஏற்பட்ட அதே உணர்வை கியாரா அத்வானியிடமும் உணர்ந்தேன் – விஷ்ணு வர்தன்!
இருப்பினும், இந்த முறை அமைதியை கடைப்பிடிக்க எனக்கு எந்த தகுதியும் இல்லை, ஏனென்றால் சில குற்றச்சாட்டுகள் என் குடும்பத்தின் மீதும் என் வயதான பெற்றோர் மற்றும் தங்கை மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் இழிந்தவை மற்றும் அவதூறானவை. இந்த நாட்டின் நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது, உண்மை விரைவில் வெளிவரும் என்று நான் நம்புகிறேன். “நீதி கிடைக்கும் என்று நான் நம்புகிறேன், நேர்மையும் வெல்லும்” என கூறியுள்ளார்.

மேலும் தனது குடும்பத்திற்கு எதிராக தன்னுடைய மனைவி ஷாலினி தல்வார் சுமத்திய பொய்யான மற்றும் தீங்கிழைக்கும் குற்றச்சாட்டுகளால் தான் மிகவும் வேதனைப்படுவதாகவும், அவருடைய இந்த பொய்யான குற்றச்சாட்டுகள் கடுமையாக வெறுக்கத்தக்கவை என்றும் பாடகர் யோ யோ ஹனி சிங் கூறியுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் ஷாலினி தல்வார் மனுவிற்கு ஹனி சிங் பதில் தாக்கல் செய்ய ஆகஸ்ட் 28 வரை அவகாசம் அளித்துள்ளது குரிப்பிடத்தக்கது.