நவரசா ஆந்தாலஜியில் கிடார் கம்பி மேலே நின்று கதையில் சூர்யாவுடன் சேர்ந்து நடித்தது அற்புதமான அனுபவம் என்கிறார் பிரயாகா மார்டின்.

பிரயாகா மார்டின்

நவரசா ஆந்தாலஜியில் கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் கிடார் கம்பி மேலே நின்று கதையில் அவருக்கு ஜோடியாக பிரயாகா மார்டின் நடித்திருக்கிறார். இந்நிலையில் சூர்யாவுடன் சேர்ந்து நடித்தது பற்றி பிரயாகா கூறியதாவது, அருமையான அனுபவம். அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்றார்.

சூர்யா

சூர்யா பற்றி பிரயாகா மேலும் கூறியதாவது, திரைத்துறையின் சூப்பர் ஸ்டார் சூர்யா சார். கவுதம் மேனன் மற்றும் சூர்யா சார் கூட்டணி சேர்ந்தாலே மேஜிக் நடக்கும். அதனால் தற்போதும் அந்த மேஜிக் நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன். சூர்யா சார் ரொம்ப ப்ரொஃபஷனலானவர், தன்மையானவர் என்றார்.

எடை

என் உடல் எடைக்காக நிறைய விமர்சனங்களை எதிர்கொள்கிறேன். கொஞ்சம் வெயிட் குறைத்தால் நீங்கள் நன்றாக இருப்பீர்கள் என்று பலர் சொல்கிறார்கள். அது உண்மை தான். ஆனால் எனக்கு PCOS/D இருப்பதால் எடையை குறைப்பது கடினம். இது பலருக்கு தெரியாது. எனக்கு PCOS பிரச்சனை இருக்கிறது என்பதை சொல்ல வெட்கப்படவில்லை என்று பிரயாகா தெரிவித்துள்ளார்.

போதும்

நான் முயற்சி செய்தும் எடையை குறைக்க முடியவில்லை. அதனால் ஒரு நடிகையை அவரின் உடல் அமைப்பை வைத்து பேசுபதை நிறுத்த வேண்டும். ஒரு நடிகையை மனுஷியாக மக்கள் பார்த்தால் நிறைய மாற்றம் ஏற்படும் என பிரயாகா மார்டின் கூறியுள்ளார்.