ஹைலைட்ஸ்:

  • சமீர் வாங்கடே பற்றி பேசிய மனைவி கிராந்தி
  • ஆர்யன் கான் சிக்க காரணமாக இருந்தவர் சமீர் வாங்கடே

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை போதை வழக்கில் பிடித்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வாங்கடே பற்றி அவரின் மனைவியான மராத்தி நடிகை கிராந்தி ரேத்கர் பேட்டி அளித்துள்ளார்.

ஷாருக்கான் மகனை கைது செய்த அதிகாரி எந்த நடிகையின் கணவர் தெரியுமா?

அந்த பேட்டியில் கிராந்தி கூறியிருப்பதாவது,

போதை தடுப்புப் பிரிவு அதிகாரியாக இருப்பது எளிது அல்ல. பல மிரட்டல்கள் வரும். அதனால் நாங்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்வது இல்லை. பிள்ளைகளுடன் நிம்மதியாக எங்கும் செல்ல முடியாது. பயமாக இருக்கும். அவர் வேலை அப்படி.

பேண்ட்டில் ரத்தக்கறையுடன் வீட்டிற்கு வந்திருக்கிறார். ஆடை கிழிந்து வந்திருக்கிறார். எங்கு சென்றீர்கள், என்ன செய்தீர்கள் என்று நான் கேட்க மாட்டேன். ரெய்டு நடத்துவது, போதைப் பொருள் மாஃபியாவை எதிர்த்து போராடுவது எளிது இல்லை.

அப்படி இருந்தும் மக்கள் என் கணவரின் வேலையை பாராட்டுவது இல்லை. ஆனால் தற்போது நிலைமை மாறியிருக்கிறது. மீடியாவும், மக்களும் அவரின் குழு செய்த வேலையை பாராட்டியதுடன், ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றார்.

மும்பையில் சொகுசு கப்பலில் நடந்த போதை பார்ட்டியில் கலந்து கொண்ட ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை அக்டோபர் 7ம் தேதி வரை என்.சி.பி. காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.