கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் அவர். இஞ்சி இடுப்பழகியான அவர் திருமணம், குழந்தைகள் என்றான பிறகு சினிமாவில் இருந்து ஒரு குட்டி பிரேக் எடுத்தார்.

அதன் பிறகு மீண்டும் நடிக்க வந்த அவருக்கு கெரியர் சரியில்லை. ஒரு படத்தில் அவர் டம்மி பீஸாக வந்ததை பார்த்த ரசிகர்கள் பதறிவிட்டனர். எப்படி இருந்த நடிகை, இப்படி ஆகிவிட்டாரே என்று ரசிகர்கள் வேதனை அடைந்தார்கள்.

கெரியரின் உச்சத்தில் இருந்தபோது நடிகை யாரையும் கண்டுகொள்ளவில்லை. அதனால் அவர் மீண்டும் திரும்பி வந்தபோது யாரும் அவரை கண்டுகொள்வில்லை.

இதையடுத்து தன்னுடன் சேர்ந்து நடித்த ஹீரோக்களுக்கு எல்லாம் போன் செய்து உங்கள் படத்தில் ஒரு சான்ஸ் கொடுங்கள் என்று அடிக்கடி கேட்டு வருகிறாராம் நடிகை. இந்நிலையில் அவருக்கு இரண்டு பட வாய்ப்புகள் கிடைத்துள்ளது. அதில் ஒரு படத்தில் அம்மணிக்கு செம வெயிட்டான கதாபாத்திரம்.

ஹீரோயினை விட இவருக்கு தான் படத்தில் அதிக முக்கியத்துவம். அந்த படம் மட்டும் வெளியானால் நடிகையின் கெரியர் மீண்டும் பிக்கப்பாகிவிடும் என்கிறார்கள். ஹீரோக்களுக்கு போன் போட்டது வீண் போகவில்லை. நான் நினைத்து நடக்க ஆரம்பித்துவிட்டது என்று நடிகை மகிழ்ச்சியில் இருக்கிறாராம்.